கைது செய்யப்பட்ட 10 தமிழக மீனவர்கள்... செப். 6 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது இலங்கை நீதிமன்றம்!!

Published : Aug 23, 2022, 08:12 PM IST
கைது செய்யப்பட்ட 10 தமிழக மீனவர்கள்... செப். 6 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது இலங்கை நீதிமன்றம்!!

சுருக்கம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 10 பேருக்கு செப்.6 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 10 பேருக்கு செப்.6 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. இதுக்குறித்து மத்திய அரசுக்கு பலமுறை கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசு தலையிட்ட போதும் இலங்கை கடற்படை இத்தகைய அத்துமீறல்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நாகப்பட்டினம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: திருநங்கைகளுக்கு முகவரி கொடுத்த மு. கருணாநிதி; LGBTQIAவுக்கு பால்புதுமையினர் என அகராதி வெளியிட்ட ஸ்டாலின்

நாகை மாவட்டம் அக்கரைப்பட்டியிலிருந்து 10 பேர் கொண்ட மீனவர்கள் மீன்பிடிக்க நேற்று கடலுக்குள் சென்றனர். அவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, அக்கரைப்பேட்டை மீனவர்கள் 10 பேரை கைது செய்தும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்தும் திரிகோணமலை கப்பற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர். இதை அடுத்து இலங்கை கடற்படை கைது செய்த நாகை மீனவர்கள் 10 பேருக்கு செப்டம்பர் 6 வரை திரிகோணமலை சிறையில் அடைத்து, நீதிமன்ற காவல் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: ஓவரா ஆட்டம் போடும் சவுக்கு சங்கர்.. உயர் நீதி மன்றம் அடித்த ஆப்பு.. அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து பேச தடை.

இதேபோல், கடந்த 6ம் தேதி கீச்சாங்குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் 9 பேர் நாகை துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கு நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அக்கரைப்பேட்டை திடீர் குப்பத்தை சேர்ந்த காமராஜ் உட்பட 9 பேரை கைது செய்து, அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணியைக் கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்!