Fisherman Arrest: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்.. தமிழக மீனவர்கள் 25 பேர் சிறை பிடிப்பு.!நாகையில் பதற்றம்

By Ajmal Khan  |  First Published Dec 10, 2023, 7:23 AM IST

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 


இலங்கை கடற்படை அட்டூழியம்

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக தமிழக மீனவர்கள் கடந்த மாதம் 27 ஆம் தேதி முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. 10 நாட்களுக்கு பிறகு கடந்த 3 தினங்களுக்க முன்பு தமிழக மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக மீண்டும் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நிலையில், ராமேஸ்வரம் மீனவர்ள் 22 பேரை இலங்கை மன்னார் மற்றும் கச்சத் தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்தது. இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும் படி மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

Latest Videos

undefined

தமிழக மீனவர்கள் மீண்டும் கைது

இந்த பதற்றமான சூழ்நிலை ஓய்வுதற்குள் இன்று மீண்டும் நாகை மாவட்டத்தை  சேர்ந்த 25 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 2 படகுகளில் மீன் பிடிக்க சென்ற 25 மீனவர்களை பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கும் படி கோரிக்கை விடுத்துள்ளனர். 

 

 

click me!