இலங்கை கடற்படையால் மீண்டும் தமிழக மீனவர்கள் 9 பேர் கைது.!படகுகளையும் சிறைப்பிடித்ததால் அதிர்ச்சியில் மீனவர்கள்

Published : Jul 25, 2023, 08:56 AM IST
இலங்கை கடற்படையால் மீண்டும் தமிழக மீனவர்கள் 9 பேர் கைது.!படகுகளையும் சிறைப்பிடித்ததால் அதிர்ச்சியில் மீனவர்கள்

சுருக்கம்

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

தமிழக மீனவர்கள் கைது

இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால்  கைது செய்யப்படுவது அவ்வப்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடல் வளத்தை அழிப்பதாகவும் இலங்கை அரசு புகார் தெரிவித்து வருகிறது. இந்தநிலையில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யப்படுவது மட்டுமில்லாம், மீனவர்களின்  படகுகளை உடைத்து வலைகளை அறுப்பதையும் வாடிக்கையாக இலங்கை கடற்படையினர் கொண்டுள்ளனர்.  கடந்த சில வாரங்களில் மட்டும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்படுவது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இலங்கை கடற்படை அத்துமீறல்

இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட படகுகளில் நேற்று முன் தினம் மீன் பிடிக்க மீனவர்கள் கடலுக்கு சென்றனர். தமிழக மீனவர்கள் இலங்கைக்கு அருகே உள்ள நெடுந்தீவு பகுதியில்  மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்து அழைத்து சென்றுள்ளனர். மேலும் இரண்டு படகுகளையும் சிறை பிடித்து சென்றுள்ளனர். மீனவர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கவும் இலங்கை கடற்படை திட்டமிட்டுள்ளது. மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அடுத்தடுத்து நடைபெறும் கைது சம்பவம் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படியுங்கள்

நீதிமன்றத்தில் எந்த தலைவர்களின் படமும் அகற்ற உத்தரவிடப்படவில்லை..! தமிழக அரசிடம் தலைமை நீதிபதி உறுதி

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!