நீதிமன்றத்தில் எந்த தலைவர்களின் படமும் அகற்ற உத்தரவிடப்படவில்லை..! தமிழக அரசிடம் தலைமை நீதிபதி உறுதி

Published : Jul 25, 2023, 07:57 AM ISTUpdated : Jul 25, 2023, 08:06 AM IST
நீதிமன்றத்தில் எந்த தலைவர்களின் படமும் அகற்ற உத்தரவிடப்படவில்லை..! தமிழக அரசிடம் தலைமை நீதிபதி உறுதி

சுருக்கம்

நீதிமன்றங்களில் காந்தி, திருவள்ளுவர் ஆகியோர் படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் எனவும், அம்பேத்கர் படத்தை அகற்ற சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவுறுத்திய நிலையில், எந்த தலைவர்களின் படங்களும் அகற்ற உத்தரவிடப்படவில்லையென தலைமை நீதிபதி கூறியதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

உயர்நீதிமன்றத்தில் அம்பேத்கர் படம்

தமிழ்நாடு, புதுச்சேரி உள்ள நீதிமன்றங்களில் தேசத்தந்தை மகாத்மா காந்தி, திருவள்ளுவர் ஆகியோரை தவிர வேறு எந்த தலைவர்களின்; சிலைகளும், உருவப்படங்களும், வைக்கப்படக் கூடாது என்று அனைத்து நீதிமன்றங்களுக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியதாக தகவல் வெளியானது. மேலும்,  சென்னை ஆலந்தூரில் கட்டப்பட்டுள்ள புதிய நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் படத்தை அகற்றவும் உத்தரவிடப்பட்டு சுற்றிக்கை வெளியிடப்பட்டதாக தகவல் வெளியானது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் அமைச்சர் சந்திப்பு

இதனையடுத்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், நீதிமன்றங்களில் அண்ணல் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படும் என்ற செய்தி பரவியதைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி அவர்கள் மாண்பமை மெட்ராஸ் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி நீதியரசர் சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலா அவர்களைச் சந்தித்து இது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

புகைப்படத்தை அகற்ற உத்தரவில்லை

தலைமை நீதிபதி அவர்களிடம் அண்ணல் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படக்கூடாது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டினை மாண்புமிகுசட்டத்துறை அமைச்சர் அவர்கள் கடிதம் வழங்கி நேரில் தெரிவித்தார். தமிழ்நாடுஅரசின் நிலைப்பாட்டைக் கேட்டறிந்த தலைமை நீதிபதி அவர்கள், நீதிமன்றங்களில் எந்த தலைவர்களின் புகைப்படத்தையும் அகற்ற உத்தரவிடப்படவில்லை. தற்போது உள்ள நடைமுறையே தொடரும் (Status Quo to be continued) எனத் தெரிவித்தார்.இத்தகவல் வழக்கறிஞர் மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்

நீதிமன்றத்தில் அம்பேத்கர் படத்தை அகற்ற வேண்டுமா..?? இதில் ஏதோ உள்நோக்கம் உள்ளது- காங்கிரஸ்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Tamil News Live today 09 December 2025: பலத்த கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் புதுவையில் பொதுக்கூட்டம் நடத்தும் விஜய்
விஜய் எண்ட்ரி.. மாநிலத்தின் மொத்த போலீஸ் படையையும் களம் இறக்கிய ரங்கசாமி..