படுபாவிங்க என்னத்த கலந்தாங்கன்னே தெரியலயே! எங்களை அனாதையா விட்டுட்டு போயிட்டியே! கதறும் கள்ளக்குறிச்சி பெண்கள்

By vinoth kumar  |  First Published Jun 20, 2024, 12:22 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் நேற்று காலை முதல் கள்ளச்சாராயம் கள்ளத்தனமாக விற்ற நபரிடம் இருந்து சுமார் 120க்கும் மேற்பட்ட நபர்கள் வாங்கி குடித்துள்ளனர். 


கள்ளக்குறிச்சி கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37ஆக உயர்ந்துள்ளது. இதில், 5 பெண்கள் அடங்கும் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் நேற்று காலை முதல் கள்ளச்சாராயம் கள்ளத்தனமாக விற்ற நபரிடம் இருந்து சுமார் 120க்கும் மேற்பட்ட நபர்கள் வாங்கி குடித்துள்ளனர். இதனையடுத்து அவர்களுக்கு வாந்தி  கண் எரிச்சல் தலை சுற்றல் உள்ளிட்டவை ஏற்பட்டதை அடுத்து உறவினர்கள் ஆம்புலன்ஸ் மூலமாகவும் ஆட்டோ மூலமாகவும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுமதித்தனர். இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர், விழுப்புரம் முண்டியம்பாக்கம், சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் சுமார் 35க்கும்  மேற்பட்டோரை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: Kallakurichi : விஷச்சாராயத்தால் நொடிக்கு நொடி உயரும் பலி.. 10 லட்சம் நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்

இந்நிலையில் 120க்கும் மேற்பட்ட கள்ளச்சாராயம் குடித்த நபர்களில் இதுவரை 37 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.  இதில், 5 பெண்கள் அடங்குவர். மேலும், சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே இந்த கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் எத்தனால் எனப்படும் திரவத்தை சாராயத்தில் கலந்து விற்றதே இந்த உயிரிழப்புகளுக்கு காரணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் விற்பனை செய்த கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ் உள்ளிட்ட 10 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதையும் படிங்க: கள்ளச்சாராய சாவுகளுக்கு முக்கிய காரணம் அமைச்சரின் ஆதரவாளரான இவர்கள் தான்! அம்பலப்படுத்தும் அன்புமணி!

மேலும் உயிரிழந்தவர்களின் உடலை உடனடியாக உடற்கூறு ஆய்வை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி இதுவரை சுமார் 25 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது எங்களை விட்டுட்டு போயிட்டியே.. நீ இருந்து எங்களை பாத்துப்பன்னு நினைச்சனே என மருத்துவமனையில் பெண்கள் கதறி அழுதனர்.

click me!