
Holiday special trains : சொந்த ஊரில் வேலை கிடைக்காத காரணத்தால் நாள் தோறும் பல லட்சம் பேர் வெளியூர்களுக்கு வேலை தேடி செல்கின்றனர். அந்த வகையில் சொந்த ஊரை விட்டும், உறவினர்களை விட்டும் வெளியூர்களில் பணிக்காக வருடம் முழுவதும் உழைத்து வருகிறார்கள். அப்படி வெளியூரில் வேலைக்காக செல்லும் நபர்கள் தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற நிகழ்வுகளுக்காகவும், வார விடுமுறை அல்லது தொடர் விடுமுறைக்காக மட்டுமே சொந்த ஊருக்கு செல்வார்கள். அப்போது தான் தங்களது உறவனிர்கள் மற்றும் நண்பர்களை சந்தித்து மகிழ்வார்கள். அப்படி வெளியூர் செல்பவர்களுக்கு வார விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் அனைத்து ரயில்களும் நிரம்பி வழிவதால் தவித்து நிற்பார்கள்.
எனவே கூடுதல் ரயில்கள் இயக்கப்படுமா என காத்திருப்பார்கள். அவர்களுக்கு உதவிடும் வகையில் சிறப்பு பேருந்து மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இந்த நிலையில் சனி மற்றும் ஞாயிறு விடுமுறையையொட்டி சிறப்பு ரயிலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை எழும்பூரில் (ரயில் எண் 06089/06090) இருந்து திருநெல்வேலிக்கும், திருநெல்வேலி இருந்து சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை எழும்பூரில் இருந்து வருகின்ற 21ஆம் தேதி இரவு 9:55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயிலானது அடுத்த நாள் காலை 8 45 மணிக்கு நெல்லையை சென்று சேருகிறது.
இதே போல மறுமார்கத்தில் திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயிலானது இயக்கப்படுகிறது. (ரயில் எண் 06089/06090) இந்த சிறப்பு ரயில் 22 ஆம் தேதி இரவு 9.40 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படுகிறது. அடுத்த நாள் காலை 8. 15 மணியளவில் சென்னை வந்தடைகிறது. இந்த சிறப்பு ரயிலில் இரண்டாம் வகுப்பு ஏசி இரண்டு பெட்டிகளும், மூன்றாம் வகுப்பு ஏசி இரண்டு பெட்டிகளும், 14 முன்பதிவு செய்த பெட்டிகளும், இரண்டு லக்கேஜ் பெட்டியும் இணைக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயிலானது சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், சோழவந்தான், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக திருநெல்வேலி சென்று சேருகிறது இந்த ரயிலுக்கான முன்பதிவு ஜூன் 18ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல விழுப்புரத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கும், ராமேஸ்வரத்தில் இருந்து விழுப்புரத்திற்கு வாராந்திர விரைவு ரயில் இயக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் விழுப்புரத்திலிருந்து காலை 4. 15 மணியளவில் புறப்படும் இந்த ரயிலானது காலை 11 40 மணிக்கு ராமேஸ்வரத்தை சென்று சேருகிறது. இந்த ரயிலானது ஜூன் 21, 22, 28, 29 என்ற நான்கு சேவைகள் இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல ராமேஸ்வரத்தில் இருந்து விழுப்புரத்திற்கு (ரயில் எண் 06109/06110 )சிறப்பு ரயிலானது இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் ஜூன் 21, 22, 28, 29 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது ராமேஸ்வரத்தில் இருந்து மதியம் 2. 35 மணிக்கு புறப்படும் இந்த ரயிலானது விழுப்புரத்திற்கு இரவு 10.35 மணிக்கு வந்து சேர்கிறது. இந்த சிறப்பு ரயிலில் ஒரு குளிச்சாதன வசதி கொண்ட உட்கார்ந்து செல்லும் வகையிலான பெட்டியும்,
11 முன்பதிவு செய்யப்பட்ட உட்காரும் வசதி கொண்ட பெட்டியும் இணைக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயிலானது விழுப்புரத்திலிருந்து புறப்பட்டு விருத்தாச்சலம், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, மானாமதுரை, ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரத்தை சென்று சேருகிறது. இந்த ரயிலுக்கான முன்பதிவு ஜூன் 18 தேதி காலை 8 மணிக்கு தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.