பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல கோவை, நெல்லை, தூத்துக்குடி ஆகிய ஊர்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
பொங்கல் கொண்டாட்டம்
உழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 14,15,16 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படவுள்ளது. இந்த பண்டிகையை சொந்த ஊரிலும், உறவினர்களோடு கொண்டாட மக்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் சொந்த ஊருக்கு செல்வார்கள். இதற்காக ஏற்கனவே பேருந்து, ரயில்களில் முன்பதிவு செய்துள்ளனர். இருந்த போதும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு முடிவடைந்து விட்டதால் என்ன செய்வது என தெரியாமல் மக்கள் குழப்பத்தில் உள்ளனர். இதனிடையே பொங்கலுக்கு சிறப்பு ரயிலிக்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
சிறப்பு ரயில் அறிவிப்பு
அதன் படி நெல்லை, தூத்துக்குடிக்கு தாம்பரத்தில் இருந்து ரயில்கள் இயக்கப்படுகிறது. தாம்பரத்திலிருந்து தூத்துக்குடிக்கு வருகின்ற 14 மற்றும் 16ஆம் தேதிகளில் 2 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதே போல தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்திற்கு 15 மற்றும் 17ஆம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மேலும் தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கும் பொங்கல் சிறப்பு ரயிலானது இயக்கப்படுகிறது. அதன்படி வருகின்ற 11, 13 மற்றும் 16ஆம் தேதிகளில் தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு ரயில் இயக்கப்படுகிறது. இதே போல நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு 12, 14 மற்றும் 17 ஆகிய தேதிகளில் ரயிலானது இயக்கப்பட உள்ளது. இதனையடுத்து தற்போது கோயம்புத்தூருக்கு சிறப்பு ரயிலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கோவைக்கு சிறப்பு ரயில்
அதன் படி, வருகிற 16-ஆம் தேதி மற்றும் 17ஆம் தேதி இரவு 8 45 மணிக்கு கோயம்புத்தூரில் இருந்து புறப்பட்டு தாம்பரத்திற்கு அடுத்த நாள் காலை 5.20 மணிக்கு வந்து சேருகிறது. இதே போல தாம்பரத்திலிருந்து கோயம்புத்தூருக்கு 17 மற்றும் 18ஆம் தேதிகளில் ரயிலானது இயக்கப்படுகிறது. இந்த ரயிலானது தாம்பரத்திலிருந்து காலை 7.30 மணிக்கு புறப்பட்டு மாலை 4:30 மணிக்கு கோவைக்கு சென்று சேருகிறது. இந்த ரயிலில் ஏசி பெட்டிகள் 15ம், இரண்டாம் வகுப்பு முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகள் இரண்டும் பொதுப் பெட்டிகள் இரண்டும் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பெங்களூரில் இருந்து வருகிற 12 ஆம் தேதி மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு இரவு 11.30 மணிக்கு திருச்சிக்கு வந்து சேருகிறது. இதே போல 13ஆம் தேதி காலை 4.45 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு மதியம் பெங்களூருக்கு 12மணிக்கு வந்து சேருகிறது. இதற்கான முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்