தமிழகம் முழுவதும் பரவும் இருமலுடன் கூடிய காய்ச்சல்; மார்ச் 10 முதல் 1000 இடங்களில் சிறப்பு தடுப்பு முகாம்!!

By Narendran S  |  First Published Mar 5, 2023, 6:25 PM IST

தமிழ்நாட்டில் 1000 இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்கள் வரும் 10ம் தேதி நடைபெறும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 


தமிழ்நாட்டில் 1000 இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்கள் வரும் 10ம் தேதி நடைபெறும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் தற்போது இருமலுடன் கூடிய காய்ச்சல் பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிக்கப்பட்டோருக்கு காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் வலி ஆகியவை அறிகுறிகளாக உள்ளது. தமிழகத்தில் இந்த வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இந்த வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் 1000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: திமுகவின் உருட்டல், மெரட்டலுக்கெல்லாம் பாஜக அஞ்சாது - பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி டுவீட்!

Latest Videos

இதுகுறித்து பேசிய அவர், புதுவகை வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் மாநிலம் முழுவதும் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த காய்ச்சல் முகாம் வருகிற 10 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் நடைபெறும். காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். இதில் சென்னையில் வார்டுக்கு ஒரு முகாம் வீதம் 200 வார்டுகளில் 200 முகாம்கள் நடத்தப்படுகிறது. மேலும் தொற்று அதிகம் கண்டறியப்படும் இடங்களில் நடமாடும் மருத்துவமனைகளை கொண்டு சிகிச்சை அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. முகாமில் ஒரு மருத்துவர், செவிலியர், ஒரு ஆய்வக நுட்பனர் மற்றும் உதவியாளர்கள் இருப்பார்கள்.

இதையும் படிங்க: முதுநிலை நீட் தேர்வு - தமிழகம் முழுவதும் 25 ஆயிரம் பேர் எழுதினர்

குளிர்காலம் மற்றும் பருவ மழை காலம் நிறைவடையும்போது ஏற்படும் காய்ச்சல், இருமல் இருப்பவர்களுக்கு பரிசோதித்து மருந்து மாத்திரைகள் வழங்கப்படும். அறிகுறி உள்ளவர்கள், முதியவர்கள், குழந்தைகள் மற்றும் இணைநோய் உள்ளவர்கள் தவறாமல் இந்த முகாமை அணுகி பரிசோதித்து தேவைக்கேற்ற சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். எனவே, 10 ஆம் தேதி நடைபெறும் முகாமில் காய்ச்சல் உள்ளவர்கள் பரிசோதித்துக் கொள்ளவேண்டும். பொதுவாக வைரஸ் தொற்று ஏற்படுவதால் அதிகம் பேர் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்த்தல், முக கவசம் அணிதல் போன்ற சுய கட்டுப்பாட்டு முறைகளை கடைபிடிப்பது நல்லது என்று தெரிவித்துள்ளார்.

click me!