திமுகவின் உருட்டல், மெரட்டலுக்கெல்லாம் பாஜக அஞ்சாது - பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி டுவீட்!

By Rsiva kumar  |  First Published Mar 5, 2023, 2:31 PM IST

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், திமுக அரசை விமர்சிக்கும் வகையிலும் பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி டுவீட் பதிவிட்டுள்ளார்.
 


வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக சமூக வலைதளத்தில் பொய்யான செய்தி பரவி வரும் நிலையில், வட மாநில தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதன் காரணமாக ஏராளமானோர் சொந்த ஊருக்கு திரும்ப செல்வதாகவும் தகவல் பரவியது. இந்த நிலையில் பொய்யான தகவலை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்த அறிக்கையில், வட மாநில தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊறுக்கு செல்ல காரணம் திமுக தான் என குற்றம் சாட்டியிருந்தார். திமுக வின் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்டவற்றால் தான் வட மாநிலத்தவர்கள் மீதான வெறுப்பு என்று அதில் அவர் குறிப்பிடிருந்தார்.

திராணி இருந்தால்..! முடிந்தால் என்னை 24 மணி நேரத்திற்குள் கைது செய்யுகள்.! திமுக அரசுக்கு சவால் விட்ட அண்ணாமலை!

Latest Videos

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், திமுக அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் வட மாநில தொழிலாளர்களை அவமானப்படுத்தும் நோக்கில் பேசி வருவதாக அண்ணாமலை தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது போலீசார் 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். கலவரத்தை தூண்டுதல், இரு பிரிவுகளிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் வதந்தி பரப்புதல்,குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராக தவறான கருத்து தெரிவித்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருட்டு ரயிலே ஏறி வந்தாலும் அரியணையில் ஏற்றி அழகு பார்ப்போம்! அடித்து துரத்தமாட்டோம்! திமுகவை சீண்டிய கஸ்தூரி

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறித்து கண்டனம் தெரிவித்து பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி டுவிட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: வடமாநில தொழிலாளர்கள் குறித்த விவகாரத்தில் அறிக்கை வெளியிட்டதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பிற மாநில தொழிலாளர்களை வெளியேற்ற வேண்டும் என்றும் அவர்களுக்கு வேலை அளிக்கும் தொழில் நிறுவனங்களை கண்டித்தும் கூட்டணி கட்சிகளும், தி மு க சட்ட மன்ற உறுப்பினருமான பண்ருட்டி வேல்முருகன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் சீமான் தொடர்ந்து கடுமையான விமர்சனத்தை முன் வைத்து வந்தது நாடறிந்தது. 

தமிழக அரசின் சூப்பர் திட்டம்..!! பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம்..!! எப்படி வாங்குவது?

மேலும் திமுகவின் நிர்வாகிகளும், அமைச்சர்களும் பிற மாநில தொழிலாளர்களை  பானி பூரி விற்பவர்கள், காய்ந்த ரொட்டி உண்பவர்கள், கட்டிட கூலிகள்  என்றெல்லாம் தரக்குறைவாக, வெறுப்பை கொட்டி விமர்சித்து வந்த நிலையில் அவர்களுடைய விமர்சனங்களை கண்டுகொள்ளாமல், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருந்த அரசு,  தமிழ்நாட்டில் வட இந்திய தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று உறுதியளித்து அறிக்கை விட்டதற்கு அண்ணாமலை மீது வழக்கு தொடர்ந்திருப்பது அதிகார துஷ்பிரயோகம் மட்டுமல்ல வெட்கப்பட வேண்டிய நடவடிக்கையும் கூட. 

வட மாநில தொழிலாளர்களுடன் ஹோலி கொண்டாடிய சேலம் மாவட்ட ஆட்சியர்: வைரலாகும் வீடியோ!

திமுக ஆதரவு யூ டியூப் சேனல்கள் சில திட்டமிட்ட ரீதியில் வட இந்திய தொழிலாளர்கள் மீதான வெறுப்பை கொட்டி பிரச்சாரம் செய்தது தமிழக காவல்துறையின் கண்களுக்கும், காதுகளுக்கும் எட்டவில்லையா? இரு தரப்பினருக்கிடையே பகையை உருவாகும் செயல்களை அவர்கள் செய்ததாக காவல்துறைக்கு தெரியவில்லையா?  பிற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் குறித்து பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், அறிக்கைகள், தொலைக்காட்சி, விவாதங்கள், பொது கூட்டங்களில் தரமற்ற பேச்சு என தி மு க சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி வேல்முருகன், நாம் தமிழர் சீமான், சில அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் பேசியுள்ள அனைத்தும் பொது வெளியில் கொட்டிக் கிடக்கின்றன.

சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க முடிவு.? போக்குவரத்து துறை திட்டத்திற்கு தொழிலாளர்கள் சங்கம் எதிர்ப்பு

அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய தமிழக காவல்துறை தற்போது காவல்துறைக்கு ஆதரவாக குரல் கொடுத்த அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்திருப்பது உள்நோக்கம் கொண்டது. இது போன்ற அச்சுறுத்தல்களுக்கெல்லாம் பாஜக அஞ்சாது என்பதை தமிழக அரசும், காவல்துறையும் புரிந்து கொள்ள வேண்டும். சட்ட ஒழுங்கு சீர்கேடுக்கான  குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

 

click me!