
ஆசியாவின் முக்கிய நகரங்கள், அதே போல் மேற்கு வெப்பமண்டல பசிபிக் தீவுகள் மற்றும் மேற்கு இந்தியப் பெருங்கடல் ஆகியவை கடல் மட்ட உயர்வு காரணமாக பாதிக்கப்படலாம் என்று புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
சென்னை, கொல்கத்தா, யாங்கூன், பாங்காக், ஹோ சி மின் மற்றும் மணிலா போன்ற நகரங்கள் அதிகமாக பசுமை இல்லாத வாயுக்களை வெளியேற்றுவதால் 2100 ஆம் ஆண்டுக்குள் பெரிய அளவில் பாதிக்கப்படலாம் என்று தெரிய வந்துள்ளது.
பருவநிலை மாற்றம் காரணமாக கடல் மட்டத்தில் ஏற்படும் இயற்கையான மாற்றங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. உலகெங்கிலும் உள்ள முக்கிய கடல் மட்டங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் நேச்சர் க்ளைமேட் சேஞ்ச் என்ற இதழில் வெளியாகி இருக்கிறது.
காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப முன்னுரிமை வழங்கப்படும் - முதல்வர் மு. க. ஸ்டாலின்!
அதிகரித்து வரும் கடல் வெப்பநிலை காரணமாக கடல் மட்டம் உயரும் என்று விஞ்ஞானிகள் நீண்ட காலமாக கூறி வருகின்றனர். ஏனெனில் நீர் வெப்பமடையும் போது விரிவடைகிறது மற்றும் பனிக்கட்டிகள் உருகும் போது அதிக நீர் பெருங்கடல்களில் உருவாகிறது. கடல் மட்ட உயர்வு பிராந்திய ரீதியாக மாறுபடும் என்றும் ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன. ஏனெனில், கடல் நீரோட்டங்களின் மாற்றங்கள் வடகிழக்கு அமெரிக்கா உட்பட சில கடற்கரையோரங்களுக்கு அதிக நீரை வெளியேற்றும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், எல் நினோ போன்ற நிகழ்வுகளால் ஏற்படும் இயற்கையாக நிகழும் கடல் மட்ட ஏற்ற இறக்கங்கள் அல்லது நீர் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்களால் உள் காலநிலை மாறுபாடு ஏற்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தால் மட்டும் ஏற்படும் தீவிர வெள்ள நிகழ்வுகளை விட, உள் காலநிலை மாறுபாடு சில இடங்களில் கடல் மட்ட உயர்வை 20-30 சதவீதம் அதிகரிக்கலாம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
எடுத்துக்காட்டாக, மணிலாவில், 2006 ஆம் ஆண்டை விட 2100 ஆம் ஆண்டு கடலோர வெள்ள நிகழ்வுகள் 18 மடங்கு அதிகமாக ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது காலநிலை மாற்றத்தின் அடிப்படையில் மட்டுமே என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், மோசமான சூழ்நிலையில், காலநிலை மாற்றம் மற்றும் உள் காலநிலை மாறுபாட்டின் அடிப்படையில், 96 மடங்கு வெள்ள சேதங்கள் நிகழலாம், அமெரிக்கா, ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரைகளில் கடல் மட்ட உயர்வு அதிகரிக்கும். இதுபோன்ற ஆபத்துக்கள் ஏற்படும்போது மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று வளிமண்டல ஆராய்ச்சிக்கான தேசிய மைய ஆராய்ச்ச்சியாளரும், இந்தக் கட்டுரையை எழுதியவருமான ஆக்சியு ஹு தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் எங்க தோஸ்து.. நாங்க பயந்து சொந்த ஊருக்கு போகல! வடமாநிலத்தினருடன் ஏசியாநெட் தமிழ் நேர்காணல்