ஆயுத பூஜை, காலாண்டு தேர்வு தொடர் விடுமுறை.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. முழு விவரம்

By Thanalakshmi V  |  First Published Oct 1, 2022, 11:41 AM IST

போக்குவரத்து கழக சேலம் கோட்டத்தில் தொடர் விடுமுறை முன்னிட்டு 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 
 


நாடு முழுவதும் கடந்த 26 ஆம் தேதி நவராத்திரி தொடங்கிய நிலையில், வரும்  4 மற்றும் 5 ஆம் தேதிகளில் ஆயுதபூஜை , விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. 

இதனிடயே தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இன்று முதல் 10 ஆம் தேதி வரை அளிக்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா மற்றும் சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும். 

Tap to resize

Latest Videos

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பண்டிகை கால விடுமுறையையொட்டி 5,800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  

மேலும் படிக்க:மக்களே அலர்ட் !! இனி ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க புதிய நடைமுறை அமல்..

அதன்படி சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளிடக்கிய சேலம் கோட்டம் சார்பில் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. 

சேலத்திலிருந்து சென்னை, மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு, திருப்பூர், புதுச்சேரி,பெங்களூர் ஆகிய இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

அதேபோல் தருமபுரி, கிருஷ்ணகிரியில் இருந்து பெங்களூர்,  சென்னை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களுக்கும் வரும் 6 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமென போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையை பொறுத்தவரை கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி ஆகிய மூன்று பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. 

மேலும் படிக்க:ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்... அறிவித்தது போக்குவரத்துத்துறை!!

click me!