மக்களே அலர்ட் !! இனி ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க புதிய நடைமுறை அமல்..

Published : Oct 01, 2022, 11:09 AM IST
மக்களே அலர்ட் !! இனி ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க புதிய நடைமுறை அமல்..

சுருக்கம்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இந்த மாதம் 15 ஆம் தேதிக்குள் கருவிழி பதிவு முறை  அமல்படுத்தப்படும் என்று உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.  

இதுக்குறித்து சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது; தமிழகத்தில் 2.15 கோடி குடும்ப அட்டைதார்களுக்கு பொதுவிநியோகம் திட்டத்தின் கீழ் இலவசமாகவும் குறைந்த விலையிலும் அரசி, பருப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படுகின்றன. 

பொது விநியோகம் கணிணிமயமாக்கப்பட்டு பிறகு, ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு, விற்பனை முனைய இயந்திரத்தின் மூலம் கைரேகை பதிவு சரிபார்க்கப்பட்டு பொருட்கள் வழங்கப்படுகின்றன.

ஆனால் தொடர்ச்சியாக பயோமெட்ரிக் கைரேகை பதிவு முறையில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறு பிரச்சனைகளால், குறித்த நேரத்தில் ரேஷன் பொருட்கள் வாங்கமுடியமால் அவதிப்படுவதாக, தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

மேலும் படிக்க:ஆம்னி பேருந்துகளில் கட்டண உயர்வு... வெளியானது புதிய விலை பட்டியல்!!

எனவே ஸ்மார்ட் ரேஷன் அட்டை ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதால் கைரேகை பதிவிற்கு பதிலாக கருவிழி பதிவு முறை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம்  மக்கள் சிரமமின்றி பொருட்களை வாங்கி செல்ல வழிவகை செய்யப்படும். 

கர்நாடகா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் கருவிழி பதிவு முறை ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இந்த நடைமுறை கொண்டுவருவதற்கு தொழில்நுட்ப ரீதியான வேலைகளுக்கான காலம் அவகாசம் மட்டுமே தேவைப்படுவதால், அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் அமல்படுத்தப்படும்.  

அதேபோல், முதியவர்களும், மாற்றுதிறனாளிகளும் அதற்கென உள்ள விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து, மற்றொருவர் மூலம் ரேஷன் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என்று அமைச்சர் கூறினார்.

மேலும் படிக்க:மாணவர்களே மகிழ்ச்சி!! இன்றுமுதல் 5 நாட்கள் கல்லூரிகளுக்கு விடுமுறை.. விவரம் உள்ளே

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இலங்கைக்கு உதவிய தமிழகம்: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு
இப்படியொரு ப்ளானா..? டபுள் ஸ்டாண்ட் விஜயின்..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!