“பாஜகவில் வீதிக்கு வந்த குடும்ப சண்டை” மாநில தலைவர் கவனத்திற்கு

By Dinesh TG  |  First Published Oct 1, 2022, 10:37 AM IST

திருநெல்வேலி மாவட்ட பாஜக தலைவர் தயாசங்கர் பணமோசடியில் ஈடுபட்டுள்ளதாக அக்கட்சியின் முன்னாள் மாவட்ட பொருப்பாளர் சமூக வலைதளத்தில் வெளிப்படையாக புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


திருநெல்வேலி முன்னாள் மாவட்ட பாஜக அமைப்பு சாரா துணைத்தலைவராக இருந்தவர் சுபாஷ் சந்திர போஸ் இவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”எனது பெயர் R.சுபாஷ் சந்திர போஸ் ஆகும் திருநெல்வேலி மாவட்ட பாஜகவின் முன்னாள் அமைப்பு சாரா மாவட்ட துணை தலைவர் ஆவேன்.நான் திருநெல்வேலி மாவட்டம் பாலாமடையை சேர்ந்தவன்.

 

Tap to resize

Latest Videos

தற்போது திருநெல்வேலி மாவட்ட பாஜகவின் தலைவராக உள்ள தயாசங்கர் என்னிடம் கூட்டாக குவாரி தொழில் செய்வோம் எனக்கூறி முதலீடுக்கு 40 லட்சம் பணம் கேட்டார் அதை கேட்ட நான் என்னிடம் அவ்வளோ பணம் இல்லை எனது சகோதரியின் கணவர் திரு.சண்முக சுந்தரத்திடம் பேசி அவரிடம் பணத்தை பெறுவோம் அவரை தொழிலில் கூட்டாக சேர்க்கிறேன் எனக் கூறி எனது அத்தான் மேற்படி சண்முக சுந்தரத்திடம் ரூபாய் 40 லட்சம் பெற்று தயாசங்கர் அவர்களிடம் கொடுத்தேன்.

விளம்பரம் வேண்டுமானால் படங்களில் நடிக்கலாம்: உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு டோஸ்

பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டோம் அதனால் எங்களுக்கு தர வேண்டிய பணம் 40 லட்ச ரூபாயை பல முறை கேட்டோம் அதன் பேரில் 15 லட்ச ரூபாய் மட்டும் தந்தார் மீதி பணம் 25 லட்ச ரூபாயை இப்போது தருகிறேன் அப்போது தருகிறேன் என கூறி ஏமாற்றி வருகிறார் இதனிடையில் வீட்டிற்கு சென்று பணத்தை கேட்டால் உன்னால ஆனத பாரு பணமும் கிடையாது ஒன்னும் கிடையாது எங்க வேணும்னா போய் சொல்லு எனக்கு டெல்லி வரை ஆள் இருக்கு ஆள் தெரியாம பேசாத தடம் தெரியாம ஆக்கிருவேன்னு மிரட்டுகிறார்....

ஆகவே நேர்மையான அரசியல் கட்சியான பாஜகவுக்கும் அதன் தலைவர்களுக்கு கலங்கம் ஏற்படுத்தும் திருநெல்வேலி மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் தயாசங்கர் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.....

கபாலீஸ்வரி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி 508 விளக்கு பூஜை

இக்குழுவில் இருக்கும் நண்பர்கள் அனைவரும்  இக்குறுஞ்செய்தியை மாநில தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள் கவனத்திற்கு செல்லும் படி forward செய்து உதவும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். பாஜகவின் முன்னாள், இந்நாள் பொறுப்பாளர்களின் பிரச்சினை குறித்து வெளிப்படையாக மாநிலத் தலைவரிடம் புகார் அளிக்கப்பட்டிருப்பது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!