மாணவர்களே மகிழ்ச்சி!! இன்றுமுதல் 5 நாட்கள் கல்லூரிகளுக்கு விடுமுறை.. விவரம் உள்ளே

By Thanalakshmi V  |  First Published Oct 1, 2022, 10:31 AM IST

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் நாளை முதல் 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
 


நாடு முழுவதும் வரும் அக். 4 , 5 ஆகிய தேதிகளில் ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி கொண்டப்படவுள்ளதால், அரசு அலுவலங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:விளம்பரம் வேண்டுமானால் படங்களில் நடிக்கலாம்: உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு டோஸ்

Tap to resize

Latest Videos

இந்நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் சனி, ஞாயிறு விடுமுறை தினங்கள் என்பதால், திங்கள்கிழமை மட்டும் கல்லூரிகளுக்கு மாணவர்கள் வரவேண்டிய நிலைமை இருந்தது. ஏனெனில் அதன்பின்னர் செவ்வாய், புதன்கிழமைகளில் ஆயுதபூஜை விடுமுறை வருகிறது. 

மேலும் படிக்க:ஆம்னி பேருந்துகளில் கட்டண உயர்வு... வெளியானது புதிய விலை பட்டியல்!!

இதனால் அக்.3 ஆம் தேதி கூடுதலாக விடுமுறை அளித்து அண்ணா பலகலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. இன்று முதல் தொடர்ந்து 5 நாட்கள் அண்ணாபல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.அக்.3 ஆம் தேதிக்கு பதிலாக அக்.8 ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

click me!