என்ட புருஷன தின்டான்! என்ட புள்ளயெயும் தின்டான்! பசி தீர்ந்ததாடா பாவி? முள்ளிவாய்க்கால் போரை விளக்கும் சிவரூப சாட்சி...

 
Published : May 18, 2017, 01:48 PM ISTUpdated : Sep 19, 2018, 12:37 AM IST
என்ட புருஷன தின்டான்! என்ட புள்ளயெயும் தின்டான்! பசி தீர்ந்ததாடா பாவி? முள்ளிவாய்க்கால் போரை விளக்கும் சிவரூப சாட்சி...

சுருக்கம்

Special Article Mullivaikkal Remembrance Day

”வேலுபிள்ளை பிரபாகரன் இல்லைன்னு சொல்லலை. ஆனா இருந்தார்னா நல்லா இருக்குமுன்னுதான் சொல்றோம்!” _ தனி ஈழம் அமைந்திட வேண்டும் எனும் எதிர்பார்ப்பில் உலக தமிழ் சமுதாயம் உதிர்க்கும் வார்த்தைகள் இவை. 
நேதாஜி போல் பிரபாகரனின் இறுதி நாட்களும் விடை தெரியாத புதிராய் நீண்டு கொண்டே இருக்கிறது. பொன்சேகா தலைமையிலான ராணுவம் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக கொக்கரித்தது, ராசபக்‌ஷே தலைமையிலான அதிகார மையங்கள் அதை அப்படியே நம்பி ஆனந்த தாண்டவமாடியது. ஆனால் நெடுமாறன் உள்ளிட்ட ஈழ மண்ணோடு நெருங்கிய தொடர்புடைய ஆளுமைகளோ ‘பிரபாகரன் விரைவில் வெளிப்படுவார்!’ என்று நம்பிக்கை ஊட்டிக் கொண்டே இருக்கிறார்கள். 
இருக்கட்டும்.

இறுதி போரின்  போது என்னதான் நடந்தது? என்னவெல்லாம் நடந்தது?  இலங்கை பேரினவாதிகள் எந்தளவுக்கு குரூரமாக நடந்து கொண்டார்கள் என்பதை அவ்வப்போது வெளிப்படும் இறுதிப்போர் சாட்சிகள் விளக்கிக் கொண்டே இருக்கின்றன. அதில் சமீபத்திய சாட்சிதான் சிவரூபன். இறுதிப்போரை நேரில் கண்டவர் இவர். மே 17_ம் தேதி வரை நந்திக்கடல் அருகே இருந்த இவர் இராணுவத்தின் இன அழிப்பு கொடூரத்தை வலிக்க வலிக்க விளக்கியிருக்கிறார். அதன் அவலமான ஹைலைட் காட்சிகள் இதோ அவர் வார்த்தைகளாய்...

‘’அன்று வைகாசி 16. நள்ளிரவு கடந்திருந்த்து. வழமையை விட இருள் கனத்திருந்தது போன்ற உணர்வு. ஏதோ நடக்கப்போகிறதென்ற திகில் எங்கும் சூழ்ந்திருந்தது. அதிகாலை 3 மணி இருக்கலாம். தொடங்கிற்று ஊழித்தாண்டவம். முள்ளி வாய்க்காலில் இருந்து முல்லை வட்டுவாகல் நோக்கி முன்னூறு மீட்டர் நீளத்திலும் வட ஆழ்கடலில் இருந்து நந்திக்கடல் திசையாக ஐநூறு மீட்டர் அகலத்திலுமாய் ராணுவ வேலிக்குள் அடைக்கப்பட்டிருந்த மூன்றரை லட்சத்திற்கும் மேலான மக்களை சுற்றி ராசபக்சேவின் பிணம் தின்னிப் பேய்கள் பேரவலத்தின் இறுதிப்போரை துவங்கின. தாக்குதல் அணுவணுவாய் உயர்ந்தது. 

வைகாசி _17 அதிகாலை. கோடி சிங்கங்கள் இணைந்து கர்ஜித்தால் எழும் அகோர ஓசை போல் குண்டு மழைகள் பொழிய துவங்கின. செல்லடிக்கிறாங்கோ...எனும் அலறலுடன் எம் மக்கள் புயலடித்தால் தாவ முடியாமல் தவிக்கும் காட்டு மந்திகள் போல் அங்குமிங்குமாய் ஓடினார்கள். அம்மாவோடு ஓடி வந்த மகனின் பாதியுடம்பு காணாமல் போனது. பெணாட்டியோடு ஓடிக் கொண்டிருந்த புருஷனின் தலை தெறித்து விழுந்தது. பல மனிதர்களை அக்னி அப்படியே உள்வாங்கிக்கொண்டது. சிறு குழந்தைகள் பாதி மண்டையோடு தெரிய துடித்துக் கிடந்தார்கள். 

நாற்திசைகளில் இருந்தும் எறிகணைகள் பாய்ந்தன. எங்கெங்கிருந்தோ ரசாயன குண்டுகள் வந்து விழுந்தன. இடைவெளியில்லா துப்பாக்கி வேட்டுகள். பதுங்கிப் பதுங்கி பங்கரில் (பதுங்கு குழி) இருந்து வெளியே வந்து பார்த்தேன். சற்று முன் நான் பார்த்திருந்த மனிதர்கள் சதைப்பிண்டங்களாய் சிதைந்து கிடந்தார்கள். ஆண், பெண் வித்தியாசம் தெரியவில்லை. துரத்தில் தலைவிரி கோல தாய் ஒருவர் தலையற்ற உடலொன்றை மடியில் கிடத்தி ‘கடவுளே எங்களுக்கு ஏன் இந்த அவலம்? என்ட ராசாவிண்டெ முகத்தை கூட காண முடியலியே’ என்று அவள் அரற்றிக் கொண்டிருக்கும் பொதே எங்கிருந்தோ வந்த துப்பாக்கி ரவை அவளது தலையை சிதைத்தது . முகம் கவிழ்ந்து ஈழ மண்ணை முத்தமிட்டபடியே மாய்ந்தாள். 

கண்களுக்கு எட்டிய தூரம் வரை எங்கும் பிணங்கள். மனிதச் சதையின் சிதறல்கள். சிதறிய உடல்கள் மீது என் கால்கள் பட்டுவிடக்கூடாதென இறுதி மரியாதை பக்தியுடன் நடந்தேன். ஊரே சுடுகாடாகி கிடந்தது. என் மனைவி, மற்றும் பிள்ளைகள் பதுங்கிக் கிடந்த குழி நோக்கி கிடந்தேன். வழியில் சுமார் ஆறு மாத பிள்ளை சவத்தை மார்போடு அணைத்தபடி இருந்த முப்பது வயது தாய் ‘பாவி ராசபக்சே புருஷனையும் தின்டான், என்ட பச்ச புள்ளெயையும் தின்டான் . பசி தீர்ந்ததா பாவி?’ என்று சவக்குழந்தையை முத்தமிட்டுக் கொண்டிருந்தாள். என் கண் முன்னாடியே சில கணங்களில் மன நோயாளியாக செயல்பட ஆரம்பித்தாள். 

நெஞ்சம் பொறுக்கவில்லை. இருந்தாலும் என்ட மனைவி, பிள்ளைகள் ஞாபகம் புரட்டியெடுக்க, அந்த பதுங்கு குழிக்குள் குனிந்து சென்றேன். நச்சுவாயு குண்டுகளால் நாராசப்பட்டு கிடந்தது அந்த குழி. எரிந்து கொண்டிருந்தன உடல்கள். என் சொந்தங்களை புரட்டி புரட்டி தேடினேன். பிணங்களுக்கு நடுவிலிருந்து எழுந்த ஒரு பெண் “தம்பி, உங்கட சொந்தங்கள் காலையில வட்டுவாகல் பக்கம் போயிட்டினும். நீங்க கெதியா போயி அவையள காப்பாற்றுங்கோ.’ என்றபடி மீண்டும் பிணக்குவியலினுள் விழுந்தாள். 

வட்டுவாகல் நோக்கி ஓடத்துவங்கினேன். புழுதிச்சாலையில் கற்சிதல்கள் போல் மனித விரல்கள், விழிகள், மூளைகள், முலைகள் என்று சிதறிக்கிடந்தன. அப்போது...

(சிவரூபனின் துயர விவரிப்பு தொடரும்...)

PREV
click me!

Recommended Stories

நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!
2026 புத்தாண்டு கொண்டாட்டம்.. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!