
மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து 7 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொளியில் ஆலோசனை நடத்தினார். இதில், விழுப்புரம், மதுரை, நெல்லை, கோவை, திருச்சி, தஞ்சை, உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஆட்சியர்கள் பங்கேற்றனர்.
இதில், பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு தொகை தர வேண்டும் என திருச்சி, தஞ்சை உள்ளிட்ட மாவட்ட ஆட்சியருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
விடுபட்டு போன விவசாயிகளுக்கு உடனே இடுபொருள் மானியம் அளிக்க வேண்டும் எனவும், கால் நடைகளுக்கு தீவனம் வழங்க துரித நடவடிக்கை தேவை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், நீர்தேக்க மழை காலத்திற்குள் ஏரி, குளங்களை தூர்வார வேண்டும் எனவும், சிரமமின்றி மக்களுக்கு குடிநீர் வழங்க போர்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியக்ளை கேட்டுக்கொண்டார்.
வழிமுறையை எளிமை படுத்தி தடையின்றி விவசாயிகளுக்கு வண்டல் மண் தர வேண்டும் எனவும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டார்.