தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவுவின் முயற்சியால் சமூக மோதல் வராமல் தடுக்கப்பட்டுள்ளது என்பதே நெல்லை மாவட்டத்தின் ட்ரெண்டிங் டாபிக்காக உள்ளது.
நெல்லை மாவட்டம், சீவலப்பேரி கோவில் நிர்வாகத்தை உரிமை கொண்டாடும் பிரச்னையில் கடந்த ஏப்ரல் மாதம் சிதம்பரம் என்ற பூசாரி படுகொலை செய்யப்பட்டார். அந்த வழக்கு தற்போது நிலுவையில் இருந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் அதே சமுதாயத்தைச் சேர்ந்த மாயாண்டி என்பவர் கடந்த ஆறு தினங்களுக்கு முன்பு சீவலப்பேரியில் படுகொலை செய்யப்பட்டார்.
இதையும் படிங்க..உங்களுக்கு ரத்தம் கொதிக்கவில்லையா முதல்வரே.? திமுகவை அட்டாக் செய்த பாஜக !
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த இரண்டு நபர்கள் படுகொலை சம்பவம் அந்த சமுதாய மக்களை போராட்டம் நடத்த தூண்டியதாக கூறப்படுகிறது. மாயாண்டி மற்றும் சிதம்பரம் குடும்பத்திற்கு அரசு நிவாரண நிதி மற்றும் அரசு வேலைவாய்ப்பு கேட்டு கடந்த ஐந்து தினங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதையும் படிங்க..டெக்ஸ்டர் சீரிஸ்.! புது பிரிட்ஜ்.! வேறொரு பெண்ணுடன் அவுட்டிங்.! கொடூரமாக கொல்லப்பட்ட காதலி
இந்நிலையில் சமுதாய மக்களை அழைத்து சுமுகமாக பேசி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார் தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு. சபாநாயகர் அப்பாவுவின் இந்த பேச்சு வார்த்தை மூலமாக சமூக மோதலாக மாறக்கூடிய சூழ்நிலையில் இருந்த போராட்டம் கைவிடப்பட்டது. அப்பாவு எடுத்த முயற்சி மோதல் நடைபெறாமல் தடுத்துள்ளதாக நெல்லை மாவட்ட மக்கள் கூறுகிறார்கள்.
இதையும் படிங்க..கல்லூரிகளில் ராகிங் கொடுமையா.? கடும் நடவடிக்கை பாயும் - டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு !