சிட் பண்ட் மோசடியா? MLM ஏமாற்றலா? உடனே இந்த எஸ்.பி.க்கு கால் பண்ணுங்க… பட்டைய கிளப்பும் விஜயகுமார் ஐபிஎஸ்!!

By Narendran SFirst Published Dec 7, 2021, 10:16 PM IST
Highlights

பொருளாதார குற்றங்கள் குறித்து புகாரளிப்பதற்கான தொலைப்பேசி எண்ணை பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் அறிவித்துள்ளார். 

பொருளாதார குற்றங்கள் குறித்து புகாரளிப்பதற்கான தொலைப்பேசி எண்ணை பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் அறிவித்துள்ளார். தமிழகத்தில் காவல்துறை அதிகாரிகள் 5 பேரை இடமாற்றம் செய்து உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் அண்மையில் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி செங்கல்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்த பி.விஜயகுமார், சென்னை தென்மண்டலப் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நிதி நிறுவன மோசடிகள் குறித்து தகவல் அல்லது புகார் அளிக்க தொலைப்பேசி எண்ணை வெளியிட்டுள்ளார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதில், தான் தற்போது பொருளாதார குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சிட் ஃபண்டுகள் மோசடி, நிதி நிறுவன மோசடி, பண சுழற்சி திட்டங்கள் என்ற பெயரில் மோசடி, பெருநிறுவன மோசடி முதலீடு/ வைப்பு/பங்கு உள்ளிட்ட குற்றங்களை கையாளுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அதுக்குறித்த புகார்கள் அல்லது தகவல்களை 9994790008 என்ற எண்ணில் தொடர்புக்கொண்டு தெரிவிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

joined as SP-Economic Offence Wing. we deal crimes related to
-chit funds
-Financial institution
-money circulation schemes
-company, corporate fraud investment/ deposit/ share

let me know if u have any info - 9994790008 pic.twitter.com/8rb1k2RHJe

— Vijayakumar IPS (@vijaypnpa_ips)

பணியில் சேர்ந்தவுடன் தனது துறை குறித்த குற்றங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க ஆயுதமாகும் பொருளாதார குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், எம்.பி.பி.எஸ், எம்டி பட்டப்படிப்பு படித்த டாக்டர். பின்னர் சிவில் தேர்வு எழுதி ஐபிஎஸ் அதிகாரி ஆனார். காவல்துறையில் பொதுவாக ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று பணிக்கு வரும் அதிகாரிகள் தங்களை விட ரேங்கில் குறைவாக இருக்கும் அதிகாரிகளிடம் அவ்வளவு நெருக்கமாக பழக மாட்டார்கள். கொஞ்சம் அதிகார இடைவெளியை ஐபிஎஸ் அதிகாரிகள் கடைபிடிப்பதே வழக்கம். ஆனால் செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பியாக இருக்கும் விஜயகுமார் கொஞ்சம் வித்தியாசமானவர். விஜயகுமார் செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பியாக இருக்கும் போது, காவல் ஆய்வாளர் தொடங்கி அனைத்து ரேங்க்  அதிகாரிகளிடம் தன்மையாக பழக கூடியவராக திகழ்ந்தார். அலுவல் ரீதியான கண்டிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம், சக அதிகாரிகளிடம், தன்னை விட ரேங்க் குறைவாக கொண்ட அதிகாரிகளிடம் தன்மையாக, நட்பாக பழகும் குணம் கொண்டவர்.

பணியில் நேர்மையானவர் என்று பெயரெடுத்த இவர், திருப்பத்தூரில் எஸ்.பியாக இருந்தபோது கொரோனா இரண்டாம் அலையை திறம்பட கையாண்டு மக்களின் மதிப்பைப் பெற்றார். எம்.பி.பி.எஸ், எம்டி பட்டப்படிப்பு படித்த டாக்டர் என்பதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இவர் மிக முக்கிய பங்கு வகித்தார். பரவலை கட்டுப்படுத்துவதிலும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் இவர் முக்கிய பங்கு வகித்தார். பின்னர் செங்கல்பட்டு எஸ்.பியாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் தமிழகத்தில் காவல்துறை அதிகாரிகள் 5 பேரை இடமாற்றம் செய்து உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் அண்மையில் பிறபித்த உத்தரவின் பேரில், செங்கல்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்த பி.விஜயகுமார், சென்னை தென்மண்டலப் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

click me!