திருச்செந்தூர் முருகன் கோயிலில் கொள்ளை… வெளியான சிசிடிவி காட்சி… பக்தர்களிடம் உதவி கேட்ட போலீஸ்!!

By Narendran S  |  First Published Dec 7, 2021, 7:40 PM IST

திருச்செந்தூர் முருகன் கோயிலில் வரிசையில் நிற்கும் பக்தர்களிடம் இருந்து பணம், நகையை கொள்ளையடித்த நபரின் சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் வெளியிட்டு அவரை கண்டால் தகவல் அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். 


திருச்செந்தூர் முருகன் கோயிலில் வரிசையில் நிற்கும் பக்தர்களிடம் இருந்து பணம், நகையை கொள்ளையடித்த நபரின் சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் வெளியிட்டு அவரை கண்டால் தகவல் அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். கோயிலுகு பக்தர்களிடம் பணம் மற்றும் நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்து வருவது வழக்கமாகி வருகிறது. கோயில்களில் வரிசையில் நிற்கும் மக்களிடம் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி வருகின்றனர். மேலும் இது குறித்து புகார்களும் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. இதனால் பக்தர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். சாமி தரிசனம் செய்ய வந்த இடத்தில் இவ்வாறு நடைபெறும் கொள்ளை சம்பவங்களை கண்டு மக்கள் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்துள்ளனர். அந்த வகையில் திருச்செந்தூர் கோயில் அறுபடை வீடுகளில் பிரசித்தி பெற்ற இரண்டாம் படை வீடாகும். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு பக்தர்கள் பல பகுதிகளில் இருந்தும் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

Tap to resize

Latest Videos

இதனை பயன்படுத்திக்கொள்ளும் கொள்ளை கும்பல் திருச்செந்தூரில் வந்து முகாமிட்டு கொள்ளை நடத்தி வருகின்றன. கொள்ளையர்கள் கடற்கரையில் நின்று குளிக்க செல்லும் பக்தர்களின் உடமைகளையும், பஸ்ஸ்டாண்ட் மற்றும் கோயில் வளாகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார் கண்ணாடிகளையும் உடைத்து பொருட்களையும், பணத்தினையும் கொள்ளையடித்து செல்கின்றனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார்களும் குவிந்து வருகின்றன. இந்த நிலையில் தற்போது திருச்செந்தூர் முருகன் கோவிலில் வரிசையில் நிற்போரிடம் பிளேடு போட்டு 40 பவுன் நகைகளை ஒருவர் கொள்ளையடித்து சென்றுள்ளார். இதுக்குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

"

இதை அடுத்து அங்கிருந்த சிசிடிவியை ஆய்வு செய்த காவல்துறையினர் கொள்ளையனை அடையாளம் கண்டுள்ளனர். மேலும் சிசிடிவி அடிப்படையில் கொள்ளையனை தேடும் பணி முடிக்கிவிடப்பட்டுள்ளது. சிசிடிவியில் இருக்கும் நபர் பக்தர்களோடு பக்தர்களாக கலந்து பிளேட் மூலம் நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துள்ளார். சிசிடிவி காட்சியில் அவரது கையில் இருக்கும் சட்டைப்பையில் பிளேடை மறைத்து வைத்திருந்த அவர், பின்னர் அதனை தனது வாயில் போட்டு மறைத்துக்கொண்டு சாதுரியமாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். இதை அடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையனின் புகைப்படத்தை வெளியிட்ட காவல்துறையினர், சிசிடிவி காட்சியையும் வெளியிட்டு இவர் பற்றிய தகவல் தெரிந்தால் சொல்லுமாறு கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறை பக்தர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

click me!