உஷார்!! தொடங்கியது தென்மேற்கு பருவமழை.. இன்று 14 மாவட்டங்களில் கனமழை..

Published : May 29, 2022, 02:15 PM IST
உஷார்!! தொடங்கியது தென்மேற்கு பருவமழை.. இன்று 14 மாவட்டங்களில் கனமழை..

சுருக்கம்

கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால், நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால், நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” கேரளா மற்றும்‌ அதனை ஒட்டிய பகுதிகளில்‌ தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.

29.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல்‌, திருப்பூர்‌, தென்காசி, விருதுநகர்‌, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருப்பத்தூர்‌ மற்றும்‌ திருவண்ணாமலை மாவட்டங்களில்‌
ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

30.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

31.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

01.06.2022. 02.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்‌சியஸை ஒட்டி இருக்கக்கூடும்‌.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்‌சியஸை ஒட்டி இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

29.05.2022. 30.05.2022: இலட்ச தீவு, தென்‌ கிழக்கு அரபிக்கடல்‌, கேரளா மற்றும்‌ அதனை ஒட்டிய குமரிக்கடல்‌ - தென்தமிழக கடலோரப்‌ பகுதிகள்‌ மற்றும்‌ மன்னார்‌ வளைகுடா பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ வீசக்கூடும்‌.

மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: உலக நாடுகளை மிரட்டும் குரங்கு அம்மை நோய் .. மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் ராதாகிருஷ்ணன்..

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

CM Vijay Government : எப்படி இருக்கு CM Vijay-யின் ஒரு மாதகால ஆட்சி? பாஸ் ஆயிட்டாரா?
Tamil Nadu Women Loan Scheme: பெண்களுக்கு ஜாக்பாட்! ரூ.30 லட்சம் வரை கடனை அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு! எவ்வளவு வட்டி? விண்ணப்பிப்பது எப்படி?