உலக நாடுகளை மிரட்டும் குரங்கு அம்மை நோய் .. மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் ராதாகிருஷ்ணன்..

By Thanalakshmi VFirst Published May 29, 2022, 1:10 PM IST
Highlights

இந்தியாவிலோ, தமிழ்நாட்டிலோ இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என்று தெரிவித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷணன்,  மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். மேலும் குரங்கு அம்மை அறிகுறிகள் இருந்தால் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

குரங்களிடமிருந்து மனிதனுக்கு பரவும் மிக அபூர்வமாக ஏற்படக்கூடிய குரங்கு அம்மை நோய் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 200 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தடுப்பூசியும் முறையாக சிகிச்சை மட்டுமே இதற்கு ஒரே தீர்வாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருந்தது. மேலும் இந்நோய் மெதுவாக சமூக பரவலாக மாறக்கூடிய அபாயம் உள்ளது. இதனை கட்டுபடுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது.

குரங்கு அம்மை நோய் முதன் முதலில் 1958  ஆம் ஆண்டு குரங்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. 1970 ஆம் ஆண்டு இந்நோய் மனிதர்களுக்கு பரவியது. தென் ஆப்பிரிக்கா காங்கோ நாட்டில் முதல் முறையாக பாதிப்பு ஏற்பட்டது. மனிதர்களிடையே பரவிய சின்னம்மை, பெரியம்மை நோய் போன்று குரங்களிடம் இருந்து பரவும் அம்மை நோய் , குரங்கு அம்மை நோய் என்று அழைக்கப்படுகிறது.

இதனிடையே இந்தியாவில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் குரங்கு அம்மை பாதிப்பு உள்ள நாடுகளிலிருந்து வருபவர்களை பரிசோதனைக்கு உள்படுத்தி தீவிரமாக கண்காணித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதோடுமட்டுமல்லாமல், குரங்கு அம்மை நோய் தொடர்பாக உலக சுகாதார அமைப்பில் வழிக்காட்டுதல்களை தொடர்ந்து பின்பற்றி வருவதாகவும் கூறியுள்ளது.

மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் பரவக்கூடிய இந்த நோய், தற்போது ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் பரவுவதன் காரணம் குறித்து ஆய்வு நடத்த உலக சுகாதார உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவிலோ, தமிழ்நாட்டிலோ இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என்று தெரிவித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷணன்,  மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். மேலும் குரங்கு அம்மை அறிகுறிகள் இருந்தால் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: ”சொத்து வரி கட்டுங்க..தவறினால் கட்டிடங்களுக்கு சீல் தான்” - சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை !

click me!