திரைத்துறையில் வாழ்நாள் சாதனையாளருக்கு ”கலைஞர் கலைத் துறை வித்தகர் விருது” .. தேர்வு செய்ய குழு அமைப்பு..

Published : May 29, 2022, 12:24 PM IST
திரைத்துறையில் வாழ்நாள் சாதனையாளருக்கு ”கலைஞர் கலைத் துறை வித்தகர் விருது” .. தேர்வு செய்ய குழு அமைப்பு..

சுருக்கம்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் ”கலைஞர் கலைத் துறை வித்தகர் விருது” வழங்குவதற்கு ஏதுவாக திரைப்பட இயக்குனர் எஸ்.பி முத்துராமன் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.  

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் ”கலைஞர் கலைத் துறை வித்தகர் விருது” வழங்குவதற்கு ஏதுவாக திரைப்பட இயக்குனர் எஸ்.பி முத்துராமன் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.

இதுக்குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,"தமிழ்த்‌ திரையுலகில்‌ சிறந்து விளங்கிய வாழ்நாள்‌ சாதனையாளருக்கு முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ அவர்களின்‌ பெயரில்‌ “கலைஞர்‌ கலைத்துறை வித்தகர்‌ விருது” வழங்கப்படும்‌ என்று ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

2) அவ்வகையில்‌, தமிழ்த்‌ திரையுலகில்‌ சிறந்து விளங்கிய வாழ்நாள்‌ சாதனையாளருக்கு, கலைஞர்‌ கலைத்‌ துறை வித்தகர்‌ விருதை 2022 ஆம்‌ஆண்டு ஜூன்‌ 3-ம்‌ நாள்‌ அன்று முதல்‌ ஒவ்வொரு ஆண்டும்‌ வழங்க ஏதுவாக, விருதாளரை தேர்வு செய்ய திரைப்பட இயக்குநர்‌ எஸ்‌.பி. முத்துராமனை தலைவராகவும்‌, நடிகர்‌ / நடிகர்‌ சங்கத்‌ தலைவர்‌ நாசர்‌ மற்றும்‌ நடிகர்‌ /இயக்குநர்‌ கரு.பழனியப்பன்‌ ஆகியோரை உறுப்பினர்களாகவும்‌ கொண்ட தேர்வுக்‌ குழுவினை அமைத்து ஆணையிடப்பட்டுள்ளது.

3) தேர்வுக்‌ குழுவால்‌ பரிந்துரைக்கப்படும்‌ விருதாளருக்கு விருதுத்‌ தொகையான ரூ.10 இலட்சம்‌ மற்றும்‌ நினைவுப்பரிசு ஆகியவற்றினை முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ அவர்களின்‌ பிறந்த தினமான ஜூன்‌3 ஆம்‌ நாளன்று முதல்வர்‌ வழங்கி கெளரவிப்பார்கள்‌." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: அடங்காத ஆளுங்கட்சி.. சாட்டையை எடுத்த எடப்பாடி பழனிசாமி.. போராட்டத்தில் குதிக்கும் அதிமுக !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணியைக் கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்!