இனி இது கட்டாயமில்லை... ரயில் பயணிகளுக்கு சூப்பர் செய்தி.. தெற்கு ரயில்வே அறிவிப்பு !!

By Raghupati RFirst Published Jan 29, 2022, 12:47 PM IST
Highlights

சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்ய 2 டோஸ் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் இல்லை என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 27 ஆம் தேதி மருத்துவத்துறையினருடன் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டம் நிறைவடைந்த பிறகு ஊரடங்கில் முக்கிய தளர்வுகளை முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

புறநகர் ரயில்களில் பயணிக்கும் சாதாரணப் பயணிகளின் டிக்கெட்டில் கோவிட் தடுப்பூசி சான்றிதழலில் உள்ள 12 இலக்கு எண் அச்சிடப்படும், அதேபோல் சீசன் டிக்கெட் எடுப்போரின் டிக்கெட்டில் 4 இலக்கு கோவிட் சான்றிதழ் எண் பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பலர் ரயிலில் பயணம் செய்ய முடியாத நிலை இருந்தது. ஆனால், தற்போது தமிழ்கஅரசு கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியும், ஊரடங்கை முழுமையாக விலக்கிகொண்டுள்ள நிலையில், தெற்கு ரயில்வேயும் கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளது.

சென்னை புறநகர் ரயில்களில் இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தியவர்களுக்கு மட்டுமே பயணச்சீட்டு, சீசன் டிக்கெட் என்ற கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 1 முதல் யுடிஎஸ் செயலி மூலமும் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இனிமேல் புறநகர் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு 2 டோஸ் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமில்லை. அதேநேரம் ரயில்களில் மாஸ்க் அணிந்து, தனிமனித இடைவெளியை பின்பற்றி பயணிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!