TNPSC : மாணவர்களே உஷார்.. பாடத்திட்டத்தில் அதிரடி மாற்றம்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அதிர்ச்சி தகவல் !

By Raghupati RFirst Published Jan 29, 2022, 8:45 AM IST
Highlights

குரூப்-4, குரூப்-2, குரூப்-2-ஏ உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம், டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. திறமையான ஊழியர்களை கண்டறிய போட்டி தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு ஆகிய தேர்வு முறைகளை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் நடத்தி வருகிறது. 

அதுமட்டுமல்லாமல், பதவிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 போன்ற தேர்வுகளை நடத்தி வருகிறது. தமிழகத்தில் கடந்த வருடம் கொரோனா காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது.

கட்டாயத் தமிழ்மொழித் தகுதித் தேர்வு பாடத்திட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.  டிஎன்பிஎஸ்சி குருப்-2, குருப்-2-ஏ முதல்நிலைத் தேர்வு மற்றும் குருப்-4, குருப்-3, குருப்-7-பி, குருப்-8 மற்றும் சிறை அலுவலர் தேர்வு, உதவி சிறை அலுவலர் தேர்வு ஆகியவற்றுக்கான கட்டாய தமிழ்மொழி தகுதித்தேர்வுக்கான (கொள்குறிவகை) மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டம் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டு இருப்பதாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் பி.உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

குருப்-2 மற்றும் குருப்-2-ஏ தேர்வுக்கான அறிவிப்பு வரும் பிப்ரவரி மாதத்திலும், குருப்-4 தேர்வுக்கான அறிவிக்கை மார்ச் மாதத்திலும் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி ஏற்கெனவே அறிவித்துஉள்ளது. இந்நிலையில், இத்தேர்வுகளுக்கு தற்போது புதிய பாடத்திட்டம் வெளியிடப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!