ரேஷன் கடை ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. கூட்டுறவுத் துறை போட்ட உத்தரவு..!

By vinoth kumarFirst Published Jan 29, 2022, 7:53 AM IST
Highlights

கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு, அரசு ஊழியர்கள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பொதுத் துறை நிறுவனங்களின் பணியாளர்களுக்கும், அகவிலைப்படி உயர்வினை அரசு ஆணை எண் 323, நாள்: 17.10.2019 ஆம் ஆண்டின் படி நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து, தற்போது அரசு ஊழியகளுக்கு அகவிலைப்படி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. 

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஜனவரி 1ம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவதை நிறுத்தி வைக்குமாறு, மண்டல இணை பதிவாளர்களை, கூட்டுறவு துறை அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு, அரசு ஊழியர்கள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பொதுத் துறை நிறுவனங்களின் பணியாளர்களுக்கும், அகவிலைப்படி உயர்வினை அரசு ஆணை எண் 323, நாள்: 17.10.2019 ஆம் ஆண்டின் படி நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து, தற்போது அரசு ஊழியகளுக்கு அகவிலைப்படி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், ரேஷன் ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைக்குமாறு, மண்டல இணை பதிவாளர்களை, கூட்டுறவு துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, கூட்டுறவு சங்கங்களின் நுகர்வோர் பணிகளுக்கான கூடுதல் பதிவாளர் அருணா அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்;- தமிழக அரசு ஊழியர்கள், அலுவலர்களுக்கு, 2022ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க, ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு ரேஷன் கடை விற்பனையாளர்கள், எடையாளர்களுக்கு ஊதிய உயர்வு அளித்து வெளியிடப்பட்ட அரசாணையில், புதிய அடிப்படை ஊதியத்தில் 14 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படும் என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கு பின், தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு குறித்து, எவ்வித தகவலும் அரசாணையில் குறிப்பிடப்படவில்லை. எனவே, அகவிலைப்படி உயர்வு குறித்த ஆணை அரசிடம் இருந்து பெறப்படும் வரை ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஜனவரி முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவதை நிறுத்தி வைக்க, தங்கள் மண்டலத்தில் உள்ள அனைத்து சங்கங்களுக்கும் அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

click me!