Online Exam: கல்லூரிகள் திறப்பு கையோடு குழப்பத்தில் இருந்த மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ் சொன்ன அரசு..!

By vinoth kumarFirst Published Jan 28, 2022, 6:38 AM IST
Highlights

கல்லூரிகள், தொழிற்பயிற்சி படிப்புகளுக்கு ஆன்லைன் வழியே தேர்வுகள் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதால் தேர்வுகள் எப்படி நடைபெறும்? என்பதில் மாணவர்கள் மத்தியில் குழப்பம் நீடித்து வந்தது. 

பிப்ரவரி 1ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாகவே செமஸ்டர் தேர்வுகள் நடக்கும் என உயர் கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் இருந்து வந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக பாதிப்பு எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதனால், . இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. மேலும், பள்ளி, கல்லூரிகளுக்கும் ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

இதனிடையே, நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போன கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைய தொடங்கியுள்ளது. இதனால், தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அதிரடியாக ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்தது. மேலும், பிப்ரவரி 1-ம் தேதி முதல் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறும். மேலும், கொரோனா பாதுகாப்பு மையங்களை தவிர்த்து மற்ற அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தொழில்பயிற்சி மற்றும் பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வருகிற 1-ம் தேதி முதல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரிகள், தொழிற்பயிற்சி படிப்புகளுக்கு ஆன்லைன் வழியே தேர்வுகள் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதால் தேர்வுகள் எப்படி நடைபெறும்? என்பதில் மாணவர்கள் மத்தியில் குழப்பம் நீடித்து வந்தது. 

இந்நிலையில், பிப்ரவரி 1-ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாகவே செமஸ்டர் தேர்வுகள் நடக்கும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மேலும் கல்லூரிகள், தொழிற்பயிற்சி படிப்புகளுக்கு ஆன்லைன் வழியே தேர்வுகள் நடத்தப்படும் என்றும், கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ஆன்லைன் தேர்வு நடைபெறும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்

click me!