TASMAC: கட்டுக்கடங்காத வேகத்தில் கொரோனா.. டாஸ்மாக் கடைகள் மூடலா? அமைச்சர் செந்தில் பாலாஜி பரபரப்பு தகவல்.!

By vinoth kumarFirst Published Jan 26, 2022, 6:34 AM IST
Highlights

தற்போது டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது அல்லது நேரம் குறைக்கப்படுவது குறித்து மருத்துவ குழுவினருடனான ஆலோசனைக்குப் பிறகு முடிவு எடுக்கப்படும். 

தமிழகத்தில் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச இணைப்பு வழங்கும் திட்டப்பணிகள் வரும் ஏப்ரல் மாதம் முழுமையாக நிறைவடையும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

சென்னை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில் நேற்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் இயக்குநர்கள் மற்றும் தலைமை பொறியாளர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி;- 26,384 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வாங்கப்பட்டுள்ளதாகவும், 60,777 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார். 

முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த 8,905 மின்மாற்றிகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 8,221 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள பணிகள் ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்கப்படும் எனவும் கூறினார்.  மழைக்காலங்களில் பில்லர் பெட்டிகள் எளிதில் பழுதடைந்து விடுவதால் அவர்களை உயர்த்தி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை மழையால் பாதிக்கப்பட்ட 340 பில்லர் பெட்டிகள் 1 மீட்டர் அளவுக்கு உயர்த்தி அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் டாஸ்மாக் கடைகளை மூட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகிறது. டாஸ்மாக் கடைகள் மூடப்பட வாய்ப்பு உள்ளதா என்கிற கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, கொரோனா 2ம் அலையின் போது கர்நாடகா, பாண்டிச்சேரி போன்ற மாநிலங்களில் கடைகள் ஏதும் மூடப்படவில்லை. அதனால் மதுபானங்கள் தமிழகத்திற்குள் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்டுப் பல குற்றச் சம்பவங்கள் நடக்கும் சூழல் உருவானது.


தற்போது டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது அல்லது நேரம் குறைக்கப்படுவது குறித்து மருத்துவ குழுவினருடனான ஆலோசனைக்குப் பிறகு முடிவு எடுக்கப்படும். வரும் காலத்தில் மருத்துவ வல்லுநர் குழு ஆலோசனைப்படி அரசு வழிகாட்டு நெறிமுறைகளுக்கு ஏற்ப டாஸ்மாக் நிர்வாகம் செயல்படும் எனவும் தெரிவித்தார்.
 

click me!