அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்.. அரசாணை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு..!

Published : Jan 25, 2022, 09:43 AM IST
அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்.. அரசாணை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு..!

சுருக்கம்

கொரோனா தொற்று நோயால் ஏற்பட்ட நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு, அரசு ஊழியர்கள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பொதுத் துறை நிறுவனங்களின் பணியாளர்களுக்கும், அகவிலைப்படி உயர்வினை நிறுத்தி வைக்கப்பட்டது.

2016ம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகித்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கும், திருத்தப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கும் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்று நோயால் ஏற்பட்ட நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு, அரசு ஊழியர்கள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பொதுத் துறை நிறுவனங்களின் பணியாளர்களுக்கும், அகவிலைப்படி உயர்வினை, அரசு ஆணை எண் 323 நாள்: 17.10.2019 ஆம் ஆண்டின்படி நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது நடைபெற்ற சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர், அரசு ஊழியர்களுக்கு 14 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி அறிவித்து ஆணை எண் 3ல் பிறப்பிக்கப்பட்டுள்ள படி, தற்போது பெற்று வரும் 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக அகவிலைப்படி ஜனவரி 1ம் தேதி முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 2016 ஆம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கும், திருத்தப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறும் அகவிலைப்படி உயர்வு செய்யப்பட்டு தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!