சென்னை அதிர்ச்சி.. திருமணமான 5 நாளில் இளம்பெண் திடீர் தற்கொலை.. அதிர வைக்கும் காரணம்..!

By vinoth kumar  |  First Published Jan 29, 2022, 11:31 AM IST

சென்னையில் திருமணமான 5 நாளில் இளம்பெண் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


சென்னையில் திருமணமான 5 நாளில் இளம்பெண் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் 3வது பிளாக் 1வது தெருவை சேர்ந்த அபிராமி(27) என்பவருக்கும் ஓட்டேரி பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் கடந்த 23ம் தேதி திருமணம் நடைபெற்றது. ஓட்டேரியில் வி.வி.கோயில் தெருவில் உள்ள அக்கா மோகனப்பிரியா வீட்டிற்கு அபிராமி தனது கணவர் சதீசுடன் நேற்று விருந்துக்கு சென்றுள்ளார். 

Tap to resize

Latest Videos

அங்கு படுக்கை அறைக்கு சென்ற அபிராமி நீண்ட நேரமாகியும் கதவை திறக்கவில்லை. கணவர், அக்கா கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மின்விசிறியில் அபிராமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அபிராமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

undefined

இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வரதட்ணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தினர். அதில், அபாயகரமான கனவு வருகிறது என்பதால் அபிராமி பல நாட்களாக தூங்காமல் இருந்ததாகவும்  இதற்காக மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது. இந்த பிரச்சனையால் அவர் தற்கொலை செய்துகொண்டதாகா கூறப்படுகிறது. திருமணமாகி 5 நாட்களே ஆன நிலையில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதையடுத்து ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. திருமணமான 5 நாட்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

click me!