ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி...சூப்பர் இதுதான் அந்த செய்தியா..?

By Raghupati R  |  First Published Jan 20, 2022, 5:36 AM IST

ரயில் பயணிகளுக்காக தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 


கொரோனா மூன்றாவது அலை ஒரு பக்கம் அதிகரித்தாலும் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ரயில் பயணிகளுக்காக தெற்கு ரயில்வேயும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால்  தற்போது 9 விரைவு ரயில்களில் இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் மீண்டும் இணைக்கப்பட உள்ளன. 

Tap to resize

Latest Videos

சென்னை சென்ட்ரல் -கேஎஸ்ஆா் பெங்களூரு லால்பாக் விரைவு ரயில் (12607), சென்னை சென்ட்ரல்-மைசூரு அதிவிரைவு ரயில் (12609), எா்ணாகுளம்-கேஎஸ்ஆா் பெங்களூரு அதிவிரைவு ரயில்(12678) ஆகிய மூன்று ரயில்களில் தலா 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் மீண்டும் சோக்கப்படவுள்ளன. இந்த முன்பதிவில்லாத பெட்டிகள் சேர்ப்பு ஜனவரி 20-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

தூத்துக்குடி-மைசூரு தினசரி விரைவு ரயிலில் (16235) இரண்டு முன்பதிவில்லாத பெட்டிகள் ஜனவரி 21-ஆம் தேதி முதல் இணைக்கப்படவுள்ளது. சென்னை சென்ட்ரல்-விஜயவாடா அதிவிரைவு ரயிலில் (12712) 6 இரண்டாம்வகுப்பு இருக்கை வசதி கொண்ட பெட்டிகள் ஜனவரி20-ஆம்தேதி முதல் சோக்கப்படவுள்ளது.

மன்னாா்குடி-திருப்பதி விரைவு ரயில் (17408), கோயம்புத்தூா் -திருப்பதி அதிவிரைவு ரயில் (22618), சென்னை சென்ட்ரல்-திருப்பதி விரைவு ரயில் (16203) உள்பட 9 விரைவு ரயில்களில் இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், இருக்கை வசதி பெட்டிகள் மீண்டும் இணைக்கப்படவுள்ளன. இந்த செய்தி ரயில்வே பயணிகள் இடையே மகிழ்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

click me!