பேப்பர், பேனா எடுத்துகோங்க... இதோ தீபாவளி சிறப்பு ரயில் டைமிங்...!

 
Published : Oct 05, 2017, 07:28 PM ISTUpdated : Sep 19, 2018, 01:16 AM IST
பேப்பர், பேனா எடுத்துகோங்க... இதோ தீபாவளி சிறப்பு ரயில் டைமிங்...!

சுருக்கம்

Southern Railway announces special trains for Diwali

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

சுவிதா சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. 

அக்டோபர் 16 ஆம் தேதி சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலிக்கு இரவு 9.05-க்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. 

சென்னை சென்ட்ரலில் இருந்து எர்ணாகுளத்திற்கு இரவு 10.30 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. 

அக்டோபர் 19ஆம் தேதி திருநெல்வேலியிருந்து சென்னை எழும்பூருக்கு இரவு 9.30 மணிக்கு  சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

அக்டோபர் 22 ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து எழும்பூருக்கு பிற்பகல் 2.45 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. 

அதேபோல் எர்ணாகுளத்தில் இருந்து சென்ட்ரல் இடையே இரவு 7 மணிக்கு சுவிதா ரயில் இயக்கப்படுகிறது.

அக்டோபர் 20 மற்றும் 27ஆம் தேதி எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு இரவு 9 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. 

அக்டோபர் 20 மற்றும் 27, நவம்பர் 3 மற்றும் 10 ஆகிய தேதிகளில் சென்ட்ரலில் இருந்து  எர்ணாகுளம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. 

PREV
click me!

Recommended Stories

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.! கடலோர மாவட்டங்களில் மழை எச்சரிக்கை.. சென்னையின் நிலை என்ன?
‘எமது கொள்கை தலைவர்’ பெரியாரின் உருவப் படத்திற்கு மரியாதை செலுத்திய விஜய்