
டெங்குவை ஒழிக்க அதிரடி நடவடிக்கை...! சென்னையில் மட்டும் தான் இந்த நடவடிக்கை..!
தமிழகத்தில் பெரும் சவாலாக விளங்கி வரும் டெங்கு கொசுவை ஒழிக்க தமிழக சுகாதாரத்துறை பெரும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ஆங்காங்கு தேங்கி இருக்கும் தண்ணீரில் உருவாகும் கொசுவை ஒழிக்கும் விதமாக சென்னையில் சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள உபயோகமற்ற வாகனங்களை அகற்ற உரிமையாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒரு வாரத்திற்குள் வாகனங்களை அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சி ஆணையர் காத்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.மேலும், உபயோகமற்ற வாகனங்களில் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது எனவும், வாகனங்களை அப்புறப்படுத்தாத உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காத்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டெங்குவினால் ஏற்படும் உயிர் இழப்புகளை தடுக்கும் பொருட்டு தற்போது தான் இது போன்ற அதிரடியான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது