தெற்காசியாவின் மிகப் பெரிய பழ பண்ணை மிக விரைவில் சுற்றுலா தளமாக மாற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெற்காசியாவின் மிகப் பெரிய பழ பண்ணை மிக விரைவில் சுற்றுலா தளமாக மாற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சேலத்தில் கருமந்துறையில் நான்கு தசாப்தங்கள் பழமையான தமிழ்நாடு அரசு பழப்பண்ணை (TNGFF) - மாநிலம் மற்றும் தெற்காசியாவிலேயே மிகப்பெரியது. விரைவில் இது சுற்றுலா தலமாக மாற உள்ளது. 1981 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1,037 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பண்ணையானது இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மா மரக்கன்றுகள், ஒரு லட்சம் கொய்யா செடிகள், ஒரு லட்சம் சுப்பாரி செடிகள், 20,000 சப்போட்டா மரங்கள் மற்றும் 10,000 மாதுளை செடிகள் மூலம் ஆண்டுக்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டுகிறது. அத்துடன் வாழை மற்றும் பலா பழ மரங்களும் அங்கு உள்ளன. இங்குள்ள அதிகாரிகள் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும், பண்ணையில் 6 லட்சத்திற்கும் அதிகமான பழ செடிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இப்போது, அது எப்படி நடக்கிறது என்பதைப் பார்க்கும் வாய்ப்பைப் பொதுமக்கள் பெறப் போகிறார்கள் என்றனர்.
இதையும் படிங்க: பள்ளிப்பருவ காதலால் பொதுத்தேர்வு எழுதிய மாணவன் தலை துண்டித்து கொடூர கொலை
தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் தமிழ்செல்வி கூறுகையில், ' சுற்றுலா தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்காக 25 ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளோம். சுற்றுலாத்துறை அதிகாரிகள் பண்ணையை பார்வையிட்டுள்ளனர். நீலகிரியில் உள்ள கல்லார் பழப்பண்ணையில் நடப்பது போல் இங்கும் வேளாண் கல்லூரி அமைத்து, பழப்பண்ணையை பூங்காவாக மாற்ற வேண்டும் என கருமந்துறை கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு பழப்பண்ணையானது, மாநிலம் முழுவதும் உள்ள பழம் வளர்ப்பவர்கள், நர்சரி உரிமையாளர்கள் மற்றும் தோட்டக்காரர்களுக்கு விநியோகிக்க நோயற்ற தரமான நாற்றங்கால் செடிகளை உற்பத்தி செய்வதில் பெயர் பெற்றுள்ளது. இது பூச்சிகள் புகாத திரை வீடுகள் மற்றும் மண் ஸ்டெரிலைசேஷன் யார்டுகளுக்கான அதிநவீன வசதிகளையும் கொண்டுள்ளது, அங்கு நோயியல் வல்லுநர்கள், பூச்சியியல் வல்லுநர்கள் மற்றும் தோட்டக்கலை நிபுணர்கள் குழுவின் கண்காணிப்பின் கீழ் நர்சரி செடிகள் வளர்க்கப்படுகின்றன என்றார்.
இதையும் படிங்க: கண்டுகொள்ளப்படாத கள்ளச்சாராய மரணங்கள்! தமிழகத்தில் தொடரும் அவலம்!
கருமந்துறை வடக்குநாடு பஞ்சாயத்து தலைவர் எஸ்.வெங்கடேசன் கூறுகையில், பண்ணையில் இரண்டு இயற்கை குளங்கள் உள்ளன. குளங்களுக்கு அருகில் நடைபாதை அமைத்தால் நல்லது. பறவைக் கூடம், சிறுவர் பூங்கா, படகு இல்லம், பார்க்கும் இடங்கள் மற்றும் தங்குமிடங்களுக்கு இடம் உள்ளது. பண்ணை 1,087 ஏக்கருக்கு மேல் இருந்தாலும், 200 ஏக்கரை மட்டுமே அரசு பயன்படுத்தி வருகிறது. மீதமுள்ள இடம் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இந்த வசதிகள் இங்கே சேர்க்கப்படலாம். வெங்கடேசன், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்ட மாணவர்களின் நலன் கருதி பண்ணையில் வேளாண்மைக் கல்லூரி மற்றும் தோட்டக்கலை கல்லூரிகள் அமைக்கவும் பரிந்துரைத்தார். தோட்டக்கலைத் துறைக்கு மாநிலம் முழுவதும் 66 பழப்பண்ணைகள் உள்ளன என்றார்.