அப்பா உடல்நிலை… அப்பு மரணம்…. மனசே உடைஞ்சிடுச்சு…ரஜினி மகள் உருக்கமான ட்வீட்..

Published : Oct 30, 2021, 09:01 AM IST
அப்பா உடல்நிலை… அப்பு மரணம்…. மனசே உடைஞ்சிடுச்சு…ரஜினி மகள் உருக்கமான ட்வீட்..

சுருக்கம்

அப்பாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், புனித் ராஜ்குமார் மரணத்தால் மனது உடைந்துவிட்டதாகவும் சவுந்தர்யா ரஜினிகாந்த் உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.

சென்னை: அப்பாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், புனித் ராஜ்குமார் மரணத்தால் மனது உடைந்துவிட்டதாகவும் சவுந்தர்யா ரஜினிகாந்த் உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இந்திய திரையுலகத்தின் சோகமான நாளாக மாறிவிட்டது. கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மரணம் ஒட்டு மொத்தமாக அனைவரையும் உலுக்க ஆரம்பித்துவிட்டது.

தொடக்கத்தில் அவரது மரணசெய்தியை நம்பாத பலரும் உண்மைதான் அது இனி அதை மாற்ற முடியாது என்று தெரிந்தவுடன் கதறி துடித்தனர். நேற்று முற்பகல் 11.30 மணியளவில் புனித் ராஜ்குமாரின் மரண செய்தி அறிவிக்கப்பட்ட ரசிகர்கள் கதறி துடித்தனர்.

அவரது மறைவு குடும்பத்தினர், உறவினர்கள், திரைத்துறையினர், அரசியல் கட்சிகளின் தலைவர்களை ஒரு கணம் அதிர வைத்தது. என்னை பார்க்க இன்று வருவதாக கூறிய அவரது மரண செய்தி தம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளதாக கூறிய கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மருத்துவமனைக்கே நேரில் சென்றார்.

புனித் ராஜ்குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பல்வேறு திரையுலக பிரபலங்களும் ஆறுதல் தெரிவித்த வண்ணம் உள்ளனர். புனித் உடல் பொதுமக்கள் முதலில் வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது. நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரித்தது.

அதன் பின்னர் கன்டீவரா மைதானத்துக்கு புனித் உடல் ரசிகர்களின் அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலை காண லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். வரிசையில் அவரது ரசிகர்களை காவல்துறையினர் அஞ்சலி செலுத்த அனுமதித்து வருகின்றனர்.

இந் நிலையில் அவரது மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துவிட்டார். ரஜினிகாந்த் தற்போது உடல்நலம் சரியில்லாமல் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்று அவரது குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஒரு பக்கம் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி, மறுபக்கம் புனித் ராஜ்குமார் மறைவு என தென்னிந்திய திரையுலகம் பெருத்த சோகத்தில் சிக்கி தவித்தது.

இது குறித்து தமது டுவிட்டர் பதிவில் சவுந்தர்யா ரஜினிகாந்த் கூறி இருப்பதாவது:

அப்பாவின் உடல்நிலை தேறி வருகிறது. கடவுள் அருளாலும், அனைவரின் பிரார்த்தனையாலும் அப்பா நன்றாக உள்ளார். அதே நேரத்தில் புனித் ராஜ்குமார் மரண செய்தியால் மனம் இரண்டாக உடைந்துவிட்டது, அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் என்று தமது பதிவில் சவுந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!
2026 புத்தாண்டு கொண்டாட்டம்.. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!