சோபியாவுக்கு அடுத்த நெருக்கடி! விரைவில் விமானத்தில் பறக்க தடை!

By vinoth kumar  |  First Published Sep 7, 2018, 7:48 AM IST

விமானத்தில் வைத்து பா.ஜ.க அரசுக்கு எதிராக முழக்கமிட்ட ஆராய்ச்சி மாணவி சோபியாவுக்கு விமானத்தில் பறக்க விரைவில் தடை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.


விமானத்தில் வைத்து பா.ஜ.க அரசுக்கு எதிராக முழக்கமிட்ட ஆராய்ச்சி மாணவி சோபியாவுக்கு விமானத்தில் பறக்க விரைவில் தடை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. விமானங்களில் வரம்பு மீறி செயல்படும் பயணிகளுக்கான தண்டனை விவரங்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. அதாவது விமானத்தில் இருக்கும் போது பயணிகள் கடைபிடிக்க வேண்டிய விதிகள் பல ஆண்டுகளாக உள்ளன. ஆனால் அந்த விதிகளை மீறும் பயணிகளுக்கு தண்டனை என்பது சாதாரயமானதாக இருந்தது. இதனால் விமானத்தில் பயணிக்கும் பயணிகள் வரம்பு மீறுவது கடந்த சில ஆண்டுகளாக அதிகமானது. 

மேலும் விமானத்தில் சக பயணிகளை வம்பிழுப்பது, விமான சிப்பந்திகளை அவதூறாக பேசுவது என்று பயணிகள் செய்யும் தொல்லைகள் எல்லை இல்லாமல் போனது. இதற்கு முற்றுப் புள்ளி வைக்க கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் விதிகளை மீறுபவர்களை நோ பிளையிங் லிஸ்ட் அதாவது விமானத்தில் பறக்க தடை விதிக்கப்பட்டோர் பட்டியலை உருவாக்க முடிவு செய்தது. 

Tap to resize

Latest Videos

undefined

இதன் படி விமானத்தில் வன்முறையில் ஈடுபடுபவர்கள், வன்முறையை தூண்டுபவர்கள் உள்ளிட்டோர் எதிர்காலத்தில் விமானத்தில் பயணிக்க முடியாத வகையில் விமானத்தில் பறக்க தடை விதிக்கப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்படுவர். அந்த வகையில் ஆராய்ச்சி மாணவி சோபியா விமானத்தில் வைத்து பாசிச பா.ஜ.க அரசு ஒழிக என்று கோஷமிட்டதை தொடர்ந்து அவர்  மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே விமானத்தில் சோபியா நடந்து கொண்ட விதம் குறித்து அவர் பயணம் செய்த விமான நிறுவனமான இன்டிகோ விமான போக்குவரத்து இயக்குனரகத்தில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளது. மேலும் பாசிச பா.ஜ.க அரசு என்று முழக்கமிட்டதன் மூலம் இரு தரப்புக்கு இடையே மோதலை ஏற்படுத்த முயன்றதாக சோபியா மீது இன்டிகோ புகார் அளிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. 

இன்டிகோ புகார் அளிக்கும் பட்சத்தில் சோபியாவை விமானத்தில் பறக்க தடை விதிக்கப்பட்டோர் பட்டியலில் விமான போக்குவரத்து இயக்குனரகம் சேர்க்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே சோபியாவின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் சோபியா விமானத்தில் பறக்க தடை விதிக்கப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றால் அவர் உள்நாட்டு விமானத்தில் கூட பறக்க முடியாத சூழல் ஏற்படும்.

click me!