தூத்துக்குடியை சேர்ந்த மாணவி சோபியா மற்றும் அவரின் தந்தை சாமி ஆகிய இருவரும் 7-ம் தேதி அசல் பாஸ்போர்ட்டுடன் நேரில் ஆஜராகும்படி
புதுக்கோட்டை மகளிர் காவல் நிலைய போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
தூத்துக்குடியை சேர்ந்த மாணவி சோபியா மற்றும் அவரின் தந்தை சாமி ஆகிய இருவரும் 7-ம் தேதி அசல் பாஸ்போர்ட்டுடன் நேரில் ஆஜராகும்படி புதுக்கோட்டை மகளிர் காவல் நிலைய போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். ஆராய்ச்சி மாணவி சோபியா, இவர் கனடாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் தனது பெற்றோருடன் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்தார். அப்போது அதே விமானத்தில் பா.ஜனதா கட்சி மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் சென்றார்.
அப்போது மாணவி சோபியா பாஜகவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார். இதனால் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுதொடர்பாக தமிழிசை அளித்த புகாரின் பேரில், போலீசார் சோபியாவை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மாணவியை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதையொட்டி, உடல்நிலை பாதிப்பு காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சோபியா அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு அவருக்கு, தூத்துக்குடி நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது. பின்னர் மாலை விடுதலை செய்யப்பட்டு சோபியா வீடு திரும்பினார்.
இந்நிலையில் சோபியாவின் அசல் பாஸ்போர்ட் உடன் வரும் 7-ம் தேதி நேரில் ஆஜராக அவரது தந்தை சாமிக்கு தூத்துக்குடி புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையம் சம்மன் அனுப்பியுள்ளனர். தமிழிசை உடனான வாக்குவாதத்தின் போது காலாவதியான பாஸ்போர்ட்டை வைத்திருந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது