முழுநேர அரசு ஊழியராக்க வேண்டி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்; நிறைவேறுமா கோரிக்கை?

By Suresh Arulmozhivarman  |  First Published Aug 31, 2018, 9:25 AM IST

சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியராக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
 


புதுக்கோட்டை

சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியராக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Tap to resize

Latest Videos

undefined

புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அச்சங்கத்தின் ஒன்றியத் துணைத் தலைவர் இந்திராகாந்தி தலைமை வகித்தார். இணைச் செயலாளர் தேவிகா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் அருள்மொழி போன்றோர் முன்னிலை வகித்தனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில், "சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியராக்க வேண்டும்;

அவர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் தரவேண்டும்;

குடும்பப் பாதுகாப்புடன் கூடிய மாதாந்திர ஓய்வூதியம் ரூ.9000 தரவேண்டும்; 

உணவு மானியத் தொகையை ரூ.5000-ஆக உயர்த்த வேண்டும். 

முதலமைச்சரின் இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சமையலர் மற்றும் உதவியாளர்களையும் இணைக்க வேண்டும்" போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் சக்தி, மாவட்டத் துணைத் தலைவர் ராஜமாணிக்கம் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் அனைவரும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

click me!