அப்பா இறந்ததால் அதிர்ச்சி - மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து மகன் தற்கொலை...

 
Published : Jul 02, 2017, 03:49 PM ISTUpdated : Sep 19, 2018, 12:50 AM IST
அப்பா இறந்ததால் அதிர்ச்சி - மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து மகன் தற்கொலை...

சுருக்கம்

son suicide due to his father death

உடல்நலக் குறைவால் தன் இறந்த அதிர்ச்சியில் தனியார் மருத்துவமனையின் 4-வது மாடியில் இருந்து இன்ஜினியரிங் மாணவர் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை தண்டையார் பேட்டையைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 26 ஆம் தேதி போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் ஆறுமுகம், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

தந்தை உயிரிழந்ததை அடுத்து மிக சோகத்தில் இருந்த அவரது மகன் பிரேம் குமார், மருத்துவமனையின் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து எஸ்.ஆர்.எம்.சி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

ரயிலில் டிக்கெட் கிடைக்கலையா? டோன்ட் வொரி.. கிறிஸ்துமஸ் விடுமுறை சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம் இதோ!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!