அமைந்தகரையில் அடுத்தடுத்த தெருக்களில் 4 மோட்டார் பைக்குகள் எரிப்பு - தீ வைத்த மர்ம ஆசாமிகள்

 
Published : Jul 02, 2017, 02:56 PM ISTUpdated : Sep 19, 2018, 12:50 AM IST
அமைந்தகரையில் அடுத்தடுத்த தெருக்களில் 4 மோட்டார் பைக்குகள் எரிப்பு - தீ வைத்த மர்ம ஆசாமிகள்

சுருக்கம்

bikes burnt in aminjikarai

சென்னை, அமிஞ்சிகரை, ஜெயம்மாள் தெருவில் வசிக்கும் வெங்கடேஷ், ராஜா என்பவர்கள் வீட்டின் அருகில் உள்ள தனியார் காம்பவுன்ட் ஒன்றில் தங்களது இரு சக்கர வாகனங்களை நிறுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை எழுந்த வெங்கடேஷ், ராஜா, தங்களுடைய இருசக்கர வாகனத்தை எடுக்க சென்றனர். அப்போது வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகியிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, இருசக்கர வாகனங்கள் எரிந்தது குறித்து போலீசில் புகார் கூறினர்.

இதேபோல், மறைமலைஅடிகள் தெருவில் தனியார் காம்பவுன்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 இரு சக்கர வாகனங்கள் எரிந்து நாசமாகியது.

இது குறித்து, இருசக்கர வாகனத்தின் உரிமையாளர்கள் அப்சத், தில்லைகண்ணன் போலீசில் புகார் தெரிவித்தனர்.

பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நள்ளிரவு நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 இரு சக்கர வாகனங்களுக்கு தீவைத்த மர்ம ஆசாமிகள் யார்  என்பது குறித்து அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

ரயிலில் டிக்கெட் கிடைக்கலையா? டோன்ட் வொரி.. கிறிஸ்துமஸ் விடுமுறை சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம் இதோ!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!