
உலகின் மிகச்சிறிய செயற்கைக்கோளை தயாரித்த ரிஃபாத்-ஐ திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி, கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 படித்த மாணவர், முகமது ஷாருக் ரிபாத், கையடக்க செயற்கைக்கோள் ஒன்றை உருவாக்கினார். இந்த செயற்கைகோளுக்கு கலாம் சாட் என பெயரிட்டார்.
அமெரிக்காவின் நாசா வருடந்தோறும் க்யூப்ஸ் இன் ஸ்பேஸ் போட்டி நடத்தி வருகிறது. 57 நாடுகளைச் சேர்ந்த 8 ஆயிரம் மாணவர்களை நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தேர்வுக்காக அழைத்திருந்தது.
தமிழகத்தைச் சேர்ந்த ரிஃபாத் மற்றும் அவரின் நண்பர்கள். அந்த ஏழு இளைஞர்கள் இந்த சிறிய அதாவது கையடக்க செயற்கைக்கோளை கண்டுபிடித்தனர். இதற்கு கலாம் சாட் என அவர்கள் பெயரிட்டனர்
இந்த கலாம் சாட் செயற்கைகோள் கடந்த ஜூன் 22 ஆம் தேதி மாலை 3.30 மணிக்கு அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த கலாம் சாட் தயாரிக்க ஒரு லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். ரிஃபாத் ஷாரூக்கிற்கு நேரில் சென்று வாழ்த்து தெரவித்துள்ளார். மேலும் கலாம் சாட் செயற்கைகோள் உருவாக காரணமாக இருந்த ஸ்பைஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பை சேர்ந்த மாணவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரிஃபாத்தின் இந்த சாதனையைப் பாராட்டி தமிழக அரசு சார்பில் அவருக்கு பாராட்டும் 10 லட்ச ரூபாய் அளித்து கௌவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.