தேனியில் கோபித்துக் கொண்டு தந்தை வீட்டுக்கு போன மனைவியை அழைக்கச் சென்றபோது மனைவியை வீட்டுக்கு அனுப்ப மறுத்த மாமனாரை ஆத்திரத்தில் மருமகன் அரிவாளால் வெட்டியுள்ளார்.
தேனி
தேனியில் கோபித்துக் கொண்டு தந்தை வீட்டுக்கு போன மனைவியை அழைக்கச் சென்றபோது மனைவியை வீட்டுக்கு அனுப்ப மறுத்த மாமனாரை ஆத்திரத்தில் மருமகன் அரிவாளால் வெட்டியுள்ளார்.
தேனி மாவட்டம், போடி, மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (64). இவரது மகளை இதேப் பகுதியில் வசிக்கும் சந்திரகுமார் (34) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.
இருவரும் சந்தோஷமாக வாழ்ந்துவந்த வந்த நிலையில் கணவன் - மனைவி இடையே சண்டை ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் ஆத்திரத்தில் சந்திரகுமார் தனது மனைவியை அடித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனைவி கோபித்துக்கொண்டு தனது தந்தை வீட்டுக்குச் சென்றுவிட்டார். மனைவியை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைக்க பலமுறை சென்றும் அவர் கணவருடம் வரவில்லை.
இந்த நிலையில் தனது மனைவியை மீண்டும் சந்திரகுமார் அழைக்கச் சென்றுள்ளார். அப்போது மாமனார் ராமசாமி, எனது மகளை அனுப்ப முடியாது என்றும் அவள் என்னுடன் தான் இருப்பாள் என்றும் கூறி சந்திரகுமாரை திட்டி அங்கிருந்து செல்லும்படி கூறிவிட்டார்.
இதில் ஆத்திரமடைந்த சந்திரகுமார் வீட்டுக்குச் சென்று அரிவாள் கொண்டுவந்து மாமனார் ராமசாமியை வெட்டி உள்ளார். இதில், ராமசாமி பலத்த காயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த தகவலையும் காவலாளர்களுக்கு கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போடி தாலுகா காவல் நிலைய காவலாளர்கள் இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிந்தனர். மாமனாரை அரிவாளால் வெட்டிய சந்திரகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மாமனாரை, மருமகனே அரிவாளால் வெட்டிய சம்பவ இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.