தந்தை இறந்த 15 நாள்களில் மகனும் சாவு; தற்கொலையா? கொலையா? காவல்துறை தீவிர விசாரணை...

Asianet News Tamil  
Published : Feb 07, 2018, 08:30 AM ISTUpdated : Sep 19, 2018, 01:55 AM IST
தந்தை இறந்த 15 நாள்களில் மகனும் சாவு; தற்கொலையா? கொலையா? காவல்துறை தீவிர விசாரணை...

சுருக்கம்

son died in after 15 days father death Suicide or Murder Police Investigation ...

தஞ்சாவூர்

தஞ்சாவூரில் தந்தை இறந்த 15 நாள்களில் மகன், ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மகன் தற்கொலை செய்துகொண்டாரா? கொலையா? என்று காவலாளர்கள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேவுள்ள திருபுவனம் மேலசாலை பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் ஜோதி (46). கொத்தனார். இவருடைய மனைவி வாசுகி.

நேற்று முன்தினம் காலை ஜோதி தனது வீட்டில் இருந்து வெளியே சென்றபிறகு வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் பயந்துபோய் ஜோதியை பல இடங்களில் தேடினர். ஆனால், அவர் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை திருபுவனம் வீரசோழன் ஆற்றில் மூழ்கி ஜோதி பிணமாக மிதந்தார். ஆற்றில் குளிப்பதற்காக இறங்கிய ஜோதி ஆழமான பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கி இறந்துவிட்டாராம்.

இது குறித்து தகவல் அறிந்த திருவிடைமருதூர் காவல் ஆய்வாளார் ராஜேந்திரன் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று ஜோதியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திருவிடைமருதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உண்மையிலேயே ஜோதி, ஆழமான பகுதிக்கு சென்றுதான் இறந்துவிட்டாரா? அல்லது தங்கதை இறந்த சோகத்தில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொன்றுவிட்டனார? போன்ற பல்வேறு கோணங்களில் காவலாளார்கள் இந்த இறப்பு குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

கடந்த 15 நாள்களுக்கு முன்னர்தான் ஜோதியின் தந்தை கணபதி உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தந்தை இறந்த 15 நாள்களில் மகனும் இறந்த சம்பவம் திருபுவனம் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஊராட்சிகளில் கலப்பட பிளீச்சிங் பவுடர்... சிவகங்கை மாவட்டத்தில் அவலம்..!
கோவையில் 3.5 கோடி மதிப்புள்ள பூங்கா நிலம் ஆக்கிரமிப்பு.. மதில் சுவரை இடித்து கையகப்படுத்துங்க.. பொதுமக்கள் கோரிக்கை!