Small Onion : திடீரென உயர்ந்த சின்ன வெங்காயத்தின் விலை.! ஈரோடு சந்தையில் ஒரு கிலோ என்ன விலை தெரியுமா.?

By Ajmal Khan  |  First Published May 9, 2024, 1:21 PM IST

பரவலாக மழை பெய்து வருவதால்  ஈரோடு வார சந்தையில் 1000க்கும் மேற்பட்ட சின்ன வெங்காய மூட்டைகள் விற்பனைக்கு வந்தது. இதன் காரணமாக விதை வெங்காயத்தை விவசாயிகள் ஆர்வமாக வாங்கி சென்றனர்.


வெங்காய சாகுபடி- விவசாயிகள் ஆர்வும்

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள வாரச்சந்தை வியாழக்கிழமை கூடுகிறது. இங்கு ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சின்ன வெங்காயம் மற்றும் விளைநிலங்களில் நடவு செய்யப்படும் விதை வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த வாரங்களில் விற்பனை மந்தமாக இருந்த நிலையில் தாளவாடி மலைப்பகுதி மற்றும் கர்நாடக மாநிலத்தில் பரவலாக மழை பெய்துள்ளதால் விவசாய நிலங்களில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். 

Tap to resize

Latest Videos

விதை வெங்காயத்தின் விலை அதிகரிப்பு

இந்த நிலையில் 1000க்கும் மேற்பட்ட சின்ன வெங்காய மூட்டைகளை வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். தாளவாடி மலைப்பகுதி மற்றும் கர்நாடக மாநிலம் கொள்ளேகால், சாம்ராஜ்நகர், மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் சின்ன வெங்காயத்தை வாங்க சந்தைக்கு வந்திருந்தனர். நிலங்களில் நடவு செய்ய அதிகளவில் விதை வெங்காயத்தை வாங்கி சென்றனர்.

கடந்த சில வாரங்களாக கிலோ 35 ரூபாய்க்கு விற்ற விதை வெங்காயம் இன்று விலை உயர்ந்து கிலோ 50 முதல் 60 ரூபாய் வரை விற்பனையானது. விதை வெங்காயத்தின் விலை உயர்ந்தாலும் பரவலாக மழை பெய்துள்ளதால் விவசாயிகள் விளை நிலங்களில் பயிரிட அதிகளவில் விதை வெங்காயத்தை வாங்கி சென்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

AMUL : இனியும் ஆவினையும், தமிழ்நாடு அரசையும் நம்பி பலனில்லை "அமுல் வந்தால் வரவேற்போம்."- பால் முகவர்கள் அதிரடி

click me!