சேறும் சகதியுமான போக்குவரத்து சாலை; சீரமைக்க கோரி கிராம மக்கள் நாற்று நட்டு போராட்டம்...

 
Published : Dec 08, 2017, 07:58 AM ISTUpdated : Sep 19, 2018, 01:33 AM IST
சேறும் சகதியுமான போக்குவரத்து சாலை; சீரமைக்க கோரி கிராம மக்கள் நாற்று நட்டு போராட்டம்...

சுருக்கம்

Sloping traffic road Villagers want to reform ...

கடலூர்

கடலூரில் மழையால் சேதமடைந்து சேறும் சகதியுமான போக்குவரத்து சாலையை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கிராம மக்கள் நாற்று நட்டு போராட்டம் நடத்தினர்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள ஆலிச்சிக்குடி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்தப் பகுதியில் உள்ள ஓடையின் குறுக்கே போக்குவரத்து வசதிக்காக தரைப்பாலம் ஒன்று அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் முறையான பராமரிப்பு இல்லாததால் இந்தத் தரைப்பாலம் மிகவும் சேதமடைந்த நிலையில் இருக்கிறது.

இதனையடுத்து அதேப் பகுதியில் புதிதாக தரைப்பாலம் அமைக்கும் பணி நடந்து வந்தது. மேலும், போக்குவரத்து வசதிக்காக அருகிலேயே தற்காலிகமாக மாற்றுப்பாதை ஒன்றும் அமைக்கப்பட்டு அதில் வாகனப் போக்குவரத்து நடந்து வந்தன.

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக பெய்த பலத்த மழையால் அந்த ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், தற்காலிகமாக அமைக்கப்பட்டு இருந்த மாற்றுப்பாதையும் சேதமடைந்தது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

இதனையடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆலிச்சிக்குடி கிராம மக்கள் நேற்று அந்த சாலையில் நாற்று நட்டு போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் வட்டார ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார்.

பின்னர், இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினர். இதனால் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
மோடியை போலவே தமிழ் பற்று... சென்னையால் நெகிழ்ந்து போன பாஜக தேசிய தலைவர் நிதின் நபின்..!