ஒகி மாதிரி இன்னுமொரு புயல் கன்னியாகுமரியை தாக்குமா ? என்ன சொல்கிறார் தமிழ்நாடு  வெதர்மேன் !!

First Published Dec 8, 2017, 7:12 AM IST
Highlights
one strom affect kannyakumari dist


அண்மையில் வீசிய ஓகி புயலைப் போன்று மற்றொரு புயல் கன்னியாகுமரியை தாக்கும் என்று பரப்பப்படும்  வதந்திகளை பொது மக்கள் நம்ப வேண்டாம் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 29 ஆம்தேதி கன்னியாகுமரி அருகே தென் மேற்கு வங்கக்கடலில் உருவான ஒகி புயல் குமரி மாவட்டத்தையே புரட்டிப்போட்டது. ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கி நாசமானது. 2000 ற்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் 1 வாரமாக மாவட்டம் முழுவதும் இருளில் மூழ்கிக்கிடந்ததது. தற்போதுதான் மின்சாரம் ஒவ்வொரு பகுதியாக கொடுக்கப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் புயல் குறித்து எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாததால் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஒகி புயலில் சிக்கி மாயமாகினர்.

இந்நிலையில் ஒகி புயலைப்போன்று மற்றுமொரு புயல் கன்னியாகுமரியைத் தாக்கக்கூடும் என தகவ்லகள் வெளியாகியுள்ளன. இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது  முகநூல் பக்கத்தில்,  கன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது, அதை கன்னியாகுமரி மக்கள் நம்ப வேண்டாம். அங்கு மிதமான மழை பெய்யக்கூடும். அச்சப்படத் தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்

அதே நேரத்தில் ஓகி புயல் தாக்கிய கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரத்தின் உள்மாவட்டங்களில் அடுத்து வரும் நாட்களில் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அதிர்ஷ்டமிருந்தால், மதுரையில் கூட பெய்யலாம் என்று தெரிவித்துள்ளார்..



ஓகி புயலால் தாக்கப்பட்ட கேரளாவின் தென்மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளத என்றும்  வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி தாழ்வுமண்டலமாக மாறி ஒடிசா கடற்கரைக்கு நகர்ந்துள்ளது, அந்த காற்று தென் மாநிலங்களுக்கு சாதகமாக இருப்பதால், மழை கிடைக்கும் என்று வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
 

click me!