
கலப்பு திருமணம் செய்த காதல் ஜோடியை நீதிமன்ற வளாகத்தில் கொலை செய்ய ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்ததால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள மருவாய் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வி. இவர் சிதம்பரத்தில் உள்ள அரசு கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்நிலையில் அதே பகுதியில் உள்ள பாலிடெக்னிக்கில் பயிலும் மாணவர் எழிலரசன் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இருவரும் கடந்த 1-ம் தேதியன்று வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றுள்ளனர். ஆனால் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவர்களின் பெற்றோர்கல் 2-ம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்தநிலையில் இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டு காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். இருவரையும் விசாரித்த போலீசார் அவர்கள் மேஜர் என்று தெரிந்த பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதையறிந்த அவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் கலப்பு திருமணம் செய்த காதல் ஜோடியை நீதிமன்ற வளாகத்தில் கொலை செய்ய ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதைதொடர்ந்து இந்த காதல் ஜோடிக்கு ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.