சிறுமியை சிதைத்து நகைக்காக தாயை கொன்று தப்பிய தஷ்வந்த்...பிடிபட்டும் தப்பியோட்டம்.. மும்பையில் முழி பிதுங்கிய போலீஸ்

 
Published : Dec 07, 2017, 08:18 PM ISTUpdated : Sep 19, 2018, 01:33 AM IST
சிறுமியை சிதைத்து நகைக்காக தாயை கொன்று தப்பிய தஷ்வந்த்...பிடிபட்டும் தப்பியோட்டம்.. மும்பையில் முழி பிதுங்கிய போலீஸ்

சுருக்கம்

thaswanth escaped from police in mumbai after appeared in court

மும்பையில் கைது செய்யப்பட்ட கொலைக்குற்றவாளி தஷ்வந்த் தப்பியோடியுள்ளார்.  சென்னை அழைத்து வருவதற்காக வந்த வழியில் தஷ்வந்த் தப்பியதாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.  மும்பை விமான நிலையத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார் குற்றவாளி தஷ்வந்த்.

மும்பை பாந்த்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு அழைத்து வந்துள்ளனர் போலீஸார்.  சென்னை அழைத்து வரும் போது  போலீசாரின் பிடியில் இருந்து தப்பி ஓடியுள்ளான். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையை அடுத்த குன்றத்தூரில், சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற கொடூரன் தஷ்வந்த் நகைக்காக தனது தாயை இரும்பு ராடால் அடித்து கொலை செய்து விட்டு தப்பியோடிய நிலையில் மும்பையில் கைது செய்யப்பட்டான்.

கடந்த பிப்ரவரி மாதம் சென்னையை அடுத்த மாங்காட்டில் வசித்த தஷ்வந்த் 7 வயது சிறுமி ஹாசினியை, கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்து, எரித்து கொடூரமாக கொலை செய்தான். 

இதையடுத்து போலீசார் தஷ்வந்தை கைது செய்து குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். ஆனால் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாததால் கடந்த செப்டம்பர் மாதம் குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்த நீதிமன்றம், அவனை ஜாமீனில் விடுவித்தது. 

இதைதொடர்ந்து தஷ்வந்தின் பெற்றோர் சேகர் – சரளா ஆகியோர், தங்கள் வீட்டை, குன்றத்தூருக்கு இடமாற்றினர். 

அங்கு அவர்களோடு ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்தும் தங்கி இருந்தான். இந்நிலையில், தஷ்வந்த் அவ்வபோது செலவிற்கு பணம் கேட்டு தனது பெற்றோரை தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு, தஷ்வந்த் தனது தாயார் சரளாவிடம், செலவுக்கு பணம் கேட்டபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதாக தெரிகிறது. அப்போது, ஆத்திரமடைந்த தஷ்வந்த், இரும்பு கம்பியால் சரளாவை சரமாரியாக அடித்துக் கொன்றுவிட்டு, தப்பியோடிவிட்டான். 

பணி முடிந்து மாலை வீடு திரும்பிய அவனது தந்தை சேகர் மனைவி கொலை செய்யப்பட்டுக் கிடப்பதைக்கண்டு அதிர்ச்சியுற்றார். மேலும் அவர் அணிந்திருந்த நகை மற்றும் வைத்திருந்த பணம் திருடு போயிருப்பதையும் கண்டு போலீசுக்கு தகவல் கொடுத்தார். 

தகவலறிந்து வந்த போலீசார் சரளாவின் உடலை கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்து, தஷ்வந்தை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், கொடூர கொலைகாரன் தஷ்வந்தை மும்பையில் போலீசார் கைது செய்தனர். 

பின்னர் அவனை பாந்த்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு இன்று சென்னைக்கு கொண்டு வரும் வழியில் அவன் தப்பியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

இதனிடையே இந்தத் தகவல் பரவியதும், தஷ்வந்த் என்கவுண்டர்  செய்ய வாய்ப்பு உள்ளது என்று சமூக வலைத்தளங்களில் பலரும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் பொருநை அருங்காட்சியகம்.. முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!