பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து... 3 பேர் பலி!

Published : Sep 08, 2018, 11:29 AM ISTUpdated : Sep 09, 2018, 07:59 PM IST
பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து... 3 பேர் பலி!

சுருக்கம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காக்கி வாடன்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்துள்ளார். 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காக்கி வாடன்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்துள்ளார்.

 

நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பட்டாசு உற்பத்தி மும்பரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சிவகாசி அருகே உள்ள காக்கிவாடன்பட்டியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் வழக்கம்போல இன்று காலை பட்டாசு தயாரிக்கும் தொழிலில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். 

அங்கு பேன்சி ரக பட்டாசுகள் அங்கு தயாரிக்கப்பட்டு வந்தது. அப்போது உராய்வு காரணமாக திடீர் என வெடிவிபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர். இதில் 2 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ  இடத்தில் விரைந்த  தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

கிளிமஞ்சாரோ சிகரத்தில் தமிழக சிறுவர்களின் இமாலய சாதனை! ரூ.1,00,000-ஐ அள்ளிக்க கொடுத்த நயினார் பாலாஜி! என்ன காரணம்?
இந்த சோகத்துக்கு ஒரு முடிவே இல்லையா? வெடி விபத்தில் தூள் தூளாக சிதறிய பட்டாசு ஆலை! 4 பேர் பலி!