அ.திமு.க.வின் அடுத்த இலக்கு மத்திய அரசுதான் என்று விருதுநகரில் நடைப்பெற்ற பொதுக் கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
விருதுநகர்
அ.திமு.க.வின் அடுத்த இலக்கு மத்திய அரசுதான் என்று விருதுநகரில் நடைப்பெற்ற பொதுக் கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
undefined
அ.தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனையை விளக்கும் சைக்கிள் பேரணி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியப்பட்டியிலும் அ.தி.மு.க.வினர் பங்கேற்ற சைக்கிள் பேரணி நடைப்பெற்றது.
இந்தப் பேரணிக்கு அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், 1000-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் சைக்கிளில் பேரணியாக காரியாபட்டிக்கு வந்தடைந்தனர்.
அதன்பின்னர் அங்கு பொதுக் கூட்டமும் நடத்தப்பட்டது. அதில், அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார். அவர், "இனி நமது அடுத்த இலக்கு மத்திய அரசுதான்.
அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கும் கட்சிதான் இனிமேல் மத்தியில் ஆட்சி அமைக்க முடியும் என்று கூறிய கே.டி.ராஜேந்திர பாலாஜி, "மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க.வுக்கு 10 இடங்கள் கொடுக்கும் கட்சியுடன்தான் நாங்கள் கூட்டணி அமைப்போம்" என்றும் திட்டவட்டமாக கூறினார்.
மேலும், "மத்தியில் அமைந்த அரசுகளுக்கு இதுவரை ஜெயலலிதா பெருந்தன்மையுடன் ஆதரவு கொடுத்தார். எனவே, தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க வருகிற மக்களவைத் தேர்தலுக்கு புது வியூகங்களை அ.தி.மு.க. அமைக்கும்" என்று தெரிவித்தார்.