மாசு ஏற்படும் என்றால் அமெரிக்கா பட்டாசை தடை பண்ணியிருக்காதா? பால்வளத் துறை அமைச்சர் சரவெடி பேச்சு...

By Suresh ArulmozhivarmanFirst Published Aug 27, 2018, 12:25 PM IST
Highlights

பட்டாசு வெடிப்பதால் மாசு ஏற்படுமென்றால் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் பட்டாசு வெடிக்க அனுமதி அளித்திருக்காது என்று பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.
 

விருதுநகர்

பட்டாசு வெடிப்பதால் மாசு ஏற்படுமென்றால் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் பட்டாசு வெடிக்க அனுமதி அளித்திருக்காது என்று பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

தமிழக பட்டாசு வியாபாரிகள் கூட்டமைப்பின் முதல் மாநில மாநாடு விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் நேற்று நடைப்பெற்றது. 

இந்த மாநாட்டிற்கு அக்கூட்டமைப்பின் தலைவர் ராஜாசந்திர சேகரன் தலைமைத் தாங்கினார். இம்மாநாட்டை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி குத்துவிளக்கு ஏற்றித் தொடக்கி வைத்தார்ர். 

அப்போது அவர் பேசியது: "பட்டாசு வெடிப்பதால் மாசு ஏற்படுமென்றால் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் பட்டாசு வெடிக்க அனுமதி அளித்திருக்காது. 

பட்டாசு தயாரிப்பு முதல் அதன் மூலப்பொருள்கள் தயாரிப்பு, அட்டைப் பெட்டிகள் தயாரிப்பு, லாரி ஓட்டுநர்கள், பட்டாசுக் கடை வைத்திருப்பவர்கள் என இந்தியா முழுவதும் ஒன்றரை கோடி பேர் இத்தொழிலில் ஈடுபட்டு உள்ளனர்.

எனவே, பட்டாசுத் தயாரிப்பிற்கும், வியாபாரத்திற்கும் தமிழக அரசு எப்போதும் துணை நிற்கும்" என்று அவர் கூறினார். 

இந்த மாநாட்டில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன், தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஆசைதம்பி, துணை முதன்மை வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி சுந்தரேசன் மற்றும் பட்டாசு உற்பத்தியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். பொருளாளர் கந்தசாமிராஜன் நன்றித் தெரிவித்து மாநாட்டை முடித்துவைத்தார். 

click me!